வாக்களிக்கத் தகுதியான 97 கோடிப் பேர்!

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், முன்னதாக வாக்காளர் எண்ணிக்கை தொடர்பாகப் பேசினார். 

அப்போது, “2024 மக்களவைத் தேர்தலில் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். அதில் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

அதிகாரிகள், ஊழியர்கள், காவலர்கள் என 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்” எனக் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், “இந்தத் தேர்தலில் 97 கோடி மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள்.

இதில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 47.15 கோடி.   

1.82 கோடி வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.

21 முதல் 30 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 19.7 கோடி பேர். 

82 லட்சம் வாக்காளர்கள் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 40 சதவீத குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதிகள் செய்து தரப்படும்” என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்.

You might also like