மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜுன் மாதம் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்த வேண்டும்.

ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை நாளை (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுடன், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியும் நாளை அறிவிக்கப்படும்.

பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சில சட்டசபைத் தொகுதிகளின்  இடைத்தேர்தல் தேதியும் நாளை வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பாஜகவில் சேர்ந்துள்ளதால், அவரது விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளது.

அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-பி.எம்.எம்.

You might also like