– எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
புத்தகம் ஏன் ஒருவருக்குப் பிடிக்காமல் போகிறது? எதனால் எழுத்தின் மீது இத்தனை வெறுப்பு உருவாகிறது?
காலில் மிதிபடும் காகிதத்தைக்கூட ‘சரஸ்வதி’ என்று தொட்டுக் கும்பிடப் பழகிய மக்களுக்கு, எப்படிப் புத்தகம் மீது இவ்வளவு கசப்புணர்வு உருவானது? புத்தகம் படிக்க விருப்பமில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், புத்தகங்களைப் பிறர் படிப்பதைப் பார்த்தாலே கோபம் வருவதை, புத்தகங்களை எரித்து விடுவதை எப்படிப் புரிந்து கொள்வது? என்ன மனக்கோளாறு இது?
வெட்டிப் பேச்சு, ஊர்வம்பு எனத் தேடித் தேடிப் பேசுகிறார்கள். ஆனால், புத்தகம் படிக்க ஆர்வமாக முன்வரவில்லை என்பது, மக்கள் மனதில் புரிந்து கொள்ள முடியாத நோய்மை உருவாகி இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.
#எழுத்தாளர்_எஸ்.ராமகிருஷ்ணன் #எஸ்_ரா #writer_S_Ramakrishnan #S_Ra #writer_s_ra #writer_s_ramakrishnan