அ. மார்க்ஸ் பதிவு
இன்று காலை முகநூலைப் புரட்டியபோது ஒரு விவாதம் கண்ணில்பட்டது. பலதார மணம் குறித்த இஸ்லாமிய நம்பிக்கை பற்றிய விவாதம் அது.
அந்த அடிப்படையில் எளிதில் இஸ்லாம் மதத்தை யாரும் குற்றம் சாட்டுவது எளிது. அதற்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் அபத்தம். பிற மதத்தினரைக் காட்டிலும் இஸ்லாத்தில் இன்று அப்படியான பலதார மணம் என்கிற நிலை இல்லை.
இஸ்லாமில் அப்படியான நிலை தொடக்க காலத்தில் இருந்தது உண்மைதான். நபிகள் நாயகம் அவர்களே அவ்வாறு பலதார மணம் செய்துகொண்டவர்தான்.
இதை நாம் சரியாகப் புரிந்து எதிர்கொள்வது அவசியம். இஸ்லாம் தோன்றிய அன்றைய காலகட்டத்தோடு இதை நாம் காண வேண்டும்.
கடுமையான போர்கள் நிறைந்த ஒரு காலகட்டம் அது. போர்க்களத்தில் ஏராளமாக ஆண்கள் பலியாகிக்கொண்டிருந்த தருணம் அது. இதனூடாக கணவரை இழந்த பெண்கள் அதிகம் இருந்த ஒரு காலகட்டப் பின்னணியில் இதை நாம் காணவேண்டும்.
இன்று முஸ்லிம்கள் எல்லோரும் அப்படிப் பலதார மணம் புரிகின்றானரா என்றால் இல்லை என்பதுதான். இது குறித்த ஒப்பீட்டுப் புள்ளி விவரங்கள் உள்ளனவா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதுதான் எதார்த்தம்.
போர்ச்சூழல் நிரம்பியிருந்த எல்லாக் காலகட்டங்களிலும் எல்லா நம்பிக்கையாளர்கள் மத்தியிலும் இப்படிப் பலதார மரணங்கள் நடந்துள்ளன. எல்லா மதக் கடவுளர்களும் பெரும்பாலும் பலதார மணம் செய்து கொண்டவர்கள்தான்.
இன்றைய சூழலில் இஸ்லாமில் உள்ள இந்த ஆண்களின் பலதார மண ஏற்பு அப்படி எல்லாம் பிற மதத்தினரைக் காட்டிலும் நடைமுறையில் இல்லை என்பதுதான்.
ஆக, இது ஒரு வெட்டித்தனமான விவாதம். முஸ்லிம்கள் வரிந்து கட்டிக் கொண்டு இதற்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
நன்றி: அ. மார்க்ஸின் பேஸ்புக் பதிவு