நூல் அறிமுகம்:
ராமதுரை – பார்வதி அம்மாள் தம்பதியர்களுக்கு பிரகாசம் என்ற ஒரு பையன். அழகிய எளிமையான குடும்பம்.
வயலின் வித்துவானான ராமதுரை பின்பு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட தன் கணவனை பிரிந்து தன் மகனுடன் வாழ்ந்து வருகிறாள் பார்வதி அம்மாள்.
மெடிக்கல் ஷாப் நடத்தி வரும் தன் மகனின் வருகைக்காக தினம்தோறும் மாடிப் படிகளில் காத்திருப்பாள். திருமண வயதை எட்டிய தன் மகன் அவர்கள் வீட்டருகே வசிக்கும் கேரள குடும்பத்தை சேர்ந்த நளினியை காதலிக்கிறார்.
தன் மகனின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு திருமணத்திற்கு முடிவு செய்து தனது கணவனையும் அழைக்க நினைக்கும் பார்வதி அம்மாள் தன் மகனிடமே தனது கணவனை அழைத்து வரும்படி கூறுகிறார்.
மகனின் அழைப்பை ஏற்று இராமதுரை திருமணத்திற்கு வந்தாரா, பின்பு பிரகாசம் பார்வதி அம்மாள் ஆகியோருடன் அங்கேயே தங்கினாரா என்ற அளவில் கதை செல்கிறது.
காத்திருக்க ஒருத்தி – ஒவ்வொரு ஆண்மகனின் வரவையும் எண்ணி வீட்டில் அம்மாவாக மனைவியாக மகளாக காத்திருக்க ஒருத்தி நிச்சயம் இருந்து கொண்டு தான் இருக்கிறாள்.
நூல்: காத்திருக்க ஒருத்தி
குறுநாவல்
ஆசிரியர் : ஜெயகாந்தன்
மீனாட்சி புத்தக நிலையம்
பக்கங்கள் : 64
விலை: 38
#காத்திருக்க_ஒருத்தி_நூல் #Kaathirukka_oruthi_book #ஜெயகாந்தன் #Jeyakanthan #மீனாட்சி_புத்தக_நிலையம் #Meenachi_Puthaka_Nilaiyam