பெண் ஆளுமைகளை உருவாக்கும் ‘இமேஜ் கன்சல்டண்ட்’ துறை!

தற்போது வளர்ந்து வரும் விஞ்ஞான காலத்தில் பெண்கள் வீட்டில் இருக்க விரும்புவது இல்லை. அலுவலகங்களில் வேலை செய்யவோ அல்லது சுயதொழில் செய்யவோ விரும்புகிறார்கள்.

அது மட்டுமின்றி சுயதொழில் செய்யும் நண்பர்களுக்கு வீட்டில் இருக்கும் பெண்கள் ஆளுமைத் திறனில் உதவி செய்கிறார்கள் அதற்கு நாகரிகமாக உடை உடுத்துவதையும் அலங்காரம் செய்து கொள்வதையும் வைத்து மட்டுமே ஒருவருடைய ஆளுமை தீர்மானிக்கப்படுவதுல்லை.

செயல்பாடு, நடத்தை, குணாதிசயங்களையும் வைத்து ஒருவருடைய ஆளுமை தீர்மானிக்கப்படுகிறது. இதில் பொதுவாக பெண்கள், ஆண்களைவிடவும் திறமை வாய்ந்தவர்கள்.

இப்படி ஒவ்வொரு துறையிலும் பெண்கள் ஈடுபடவும் ஆளுமைத் திறனை மேம்படுத்தவும் ‘இமேஜ் கன்சல்டண்ட்’ என்ற துறை வழிகாட்டுகிறது.

இந்தத் துறையின் மூலம் பெண்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் அவர்களின் நடை, உடை, பாவனை, பேச்சு, அலங்கரம் இன்னும் பல தகுதிகளை வளர்த்துக்கொள்ள பயிற்சி அளிக்கின்றனர்.

இந்தத் துறையின் மூலம் ஒருவரின் இமேஜ் எப்படி உயர்த்துவது என்பதை அறியலாம்.

இமேஜ் கன்சல்டெண்ட் என்ற துறை இதுவரை வளர்ந்த நாடுகளில் பரவலாக செயல்பாட்டில் இருந்தது. தற்போது இந்தியாவிலும் இந்த இமேஜ் கன்சல்டெண்ட் துறை பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இந்தியாவிலும் ஆளுமைமிக்க பல பெண் தலைவிகளை இன்னும் அதிகம் எதிர்பார்க்கலாம்.

– ஆர். மகேஸ்வரி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.

You might also like