இசை, நடனம், நாடகத்தில் ஐரோப்பிய தாக்கம்!

நூல் அறிமுகம்:

தமிழ்நாட்டின் இசை, நடனம், நாடகம் ஆகியனவற்றின் வரலாற்றையும் இடைக்காலம் முதல் நவீன காலம் வரை மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப எவ்வாறு விடையளித்தது என்பதையும் அலசி ஆராய்கிறது இந்நூல்.

நிகழ்த்துக் கலைகளின் தகுதி மற்றும் அதன் சிறப்பை எதிரொலிப்பதோடு ஐரோப்பியத் தொடர்புகளின் மூலமாகப் பயனுள்ள உரையாடல்களையும் அறிமுகப்படுத்துகிறது.

இதுவுமன்றி புதுமையான மற்றும் நுட்பமான இசைக் கலைஞர்கள், நடனக்காரிகள், நாடக நடிகர்கள் குடியேற்ற (காலனிய)ச் சூழல் காலத்தில் எவ்வாறு இருந்தனர் என்ற அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிப் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஐரோப்பிய மதப் பரப்பாளர்களின் தொடர்பால் கிறித்தவத் தெய்வீக இசை வளர்ந்தது பற்றியும் மேலைநாட்டு இசைக்குறிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது பற்றியும் கிழக்கிந்தியக் குழுமத்தின் மூலமாக படை(இராணுவ)த்துறை இசை வளர்ச்சி பற்றியும் தெளிவுபடுத்துகிறது.

நடனவடிவங்கள், நாடகவகைகள், கலைகளின் வளர்ச்சி மற்றும் சமூகத்தில் அதன் பங்கு பற்றியும் விரிவாக வெளிப்படுத்தும் இந்த அரிய ஆங்கில நூல் பரவலாக வாசகரிடையே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் குறைந்த விலையில் உயிர் பதிப்பக உரிமையாளர் சண்முகானந்தம் வெளியிட்டுள்ளார்.

****

நூல்: The tamil artists and the arts of music dance and drama book
(The european contact impact and performance history)
ஆசிரியர்: (எஸ் ஜெயசீல ஸ்டீபன்)  s jeyaseela stephen
உயிர் பதிப்பகம்
விலை: 280

நன்றி: பேஸ்புக் பதிவு

You might also like