சிவாஜியைவிடத் தகுதியானவர்கள் யார்?

– கோமல் சுவாமிநாதன்

நம் நாட்டுக்காரன் கவனிக்க மாட்டான். ஒரு முறை கெய்ரோகாரன் ‘அவர்தானய்யா சிறந்த நடிகர்’ என்று சொன்னான்.

எகிப்து அரசாங்கம் அவருக்கு விருது அறிவித்ததை, ‘ஆஹா!’ என்று ஆர்ப்பரித்துவிட்டு அடங்கி விட்டனர்.

இப்போது பிரெஞ்சுக்காரன் தனது செவாலியர் விருதை இவருக்கு அளிக்கிறான். நடிப்புத் துறையிலும், சினிமாத்துறையிலும் கரை கடந்த பிரான்ஸ் இவரைச் சிறந்த நடிகர் என்று சொல்கிறது.

ஆனால் இந்திய அரசாங்கம் கண்டு கொள்ளவேயில்லை. ஒரு தாதா சாகிப் பால்கே அவார்டு கொடுப்பதற்கு இவரைவிடத் தகுதியானவர்கள் யார் இருக்கிறார்கள்? இப்போதுதான் சந்தேகமெல்லாம் வருகிறது. அவர் தமிழனாக பிறந்ததுதானா?

ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இல்லாததனாலா? எது எப்படி வேண்டுமானாலும், இருக்கட்டும். ஆறு கோடி தமிழ் மக்களின் இதயங்களில் நாற்பதாண்டு காலம் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் சிவாஜி கணேசன் இன்னும் பலநூறு ஆண்டுகள் அந்த ஆசனத்திலேயே அமர்வார். இந்தப் பெருமை ஒன்றே அவருக்குப் போதும்.

– சுப மங்களா  அக்டோபர் 1994 இதழ்.

You might also like