உதவியவர்களை ஓட ஓட விரட்டிய காட்டு மாடு!

மேற்குத் தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள தென்காசி மாவட்டத்தில் புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், காட்டு மாடுகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன.

அவ்வப்போது இந்த வனவிலங்குகள், வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளின் அருகில் சுற்றித்திரிகின்றன.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வண்டாடும் பொட்டல் பகுதியில் ஆண் காட்டுமாடு ஒன்று கிணற்றில் விழுந்து வெளியே வர முடியாமல் தவிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த கடையநல்லூர் தீயணைப்புத்துறையினரும் வனத்துறையினரும் இணைந்து கிணற்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காட்டுமாட்டை காப்பாற்றுவதற்காக முயற்சி மேற்கொண்டனர்.  நீண்ட நேரம் போராடி காட்டுமாடை கிணற்றிலிருந்து வெளியேற்றினர்.

அப்போது எதிர்பாராத விதமாக காட்டுமாடு வனத்துறை பணியாளர்களைத் தாக்கியது.

இதில் வனத்துறை பணியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடன் இருந்த சக வனத்துறை அலுவலர்கள் கம்புகள் மற்றும் கற்கள் கொண்டு அங்கிருந்து விரட்டினர்.

இதையடுத்து அந்த காட்டு மாடு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

You might also like