முக அழகைக் கூட்டும் கீரை ஃபேஸ்பேக்!

ஆரோக்கியமான அழகான முக அழகிற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இளமையாக இருப்பதற்கு யாருக்குத்தான் பிடிக்காது.

நீங்கள் எப்போதும் உங்கள் முகத்தை ஈரப்பதத்துடனும் பொலிவாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.

தோள் சுருக்கத்தை நீக்கி இளமையை மீட்டெடுக்க என்ன செய்யலாம்? கீரையில் கொட்டி கிடக்கிறது அழகின் ரகசியங்கள். என்னடா இது கீரை சமைக்க தானே செய்வாங்க எப்படி அழகாக்கும் பார்க்கலாமா?

முருங்கை கீரை ஃபேஸ் பேக்:

முருங்கை கீரை -கை பிடி

அரிசி மாவு – 2 டீஸ்பூன்

தேன் –தேன் 1 டீஸ்பூன்

பால் – 1 டீஸ்பூன்

செய்முறை ;

இந்த பேக் மூலம் முகத்தில் இருக்கும் நாள்பட்ட பருக்கள் வடுக்கள் மறைகிறது. மேலும் ஆரோக்கியமான முக அழகை கொடுக்கிறது.

இதில் ஆன்டி – ஆக்சிடன்ட்கள் அதிகம் இருப்பதால்

முகச்சுருக்கம் வரவிடாமல் தடுத்து இளமையான பொலிவைத் தருகிறது.

இந்த பேக் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர முகம் பொலிவு,இளமையும் அதிகரித்து வசிகரமான முகத்தின் அழகைப் பெறலாம்.

பசலைக் கீரை பேக் :

பசலை கீரை – ஒரு கைப்பிடி

தேன் -1/2 டீஸ்பூன்

கடலை மாவு – 1 டீஸ்பூன்

தயிர் -1 டீஸ்பூன்

செய்முறை..

முதலில் தண்ணீர் விட்டு கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி 1 ½ ஸ்பூன் எடுத்து கெள்ளவும்.

இதனுடன் தயிர், கடலை மாவு,தேன் கலந்து முகத்தில் பேக் போட வேண்டும். பிறகு 15 நிமிடம் ஆனதும் மிருதுவாக மசாஜ் கொடுத்து தண்ணீர் கொண்டு முகத்தை துடைத்து எடுக்கவும்.

இந்த பேக் வாரத்தில் ஒரு முறை செய்துவர முகத்திற்கு ஊட்டச்சத்தாக அமையும்.

[குறிப்பு: இந்த பேக் போடுவதற்கு முன் சூடான தண்ணீரில் துணியை நனைத்து பிழிந்து அந்த டவலை முகத்தில் ஒத்தி 2 நிமிடம் அப்படியே துணியால் முகத்தை மூடி துடைத்த பின் இந்த பேக் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.]

மேலும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளி, சுருக்கம், பருக்கள் வராமல் தடுத்து தோலின் நிறத்தை மேம்படுத்தும் முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.

தேவையில்லாத முடியை நீக்கும் குப்பை கீரை:

குப்பைமேனிக் கீரை – ஒரு கைப்பிடி

அதிமதுரப் பொடி – 2 ஸ்பூன்

கடலை மாவு – 1 டீஸ்பூன்

கஸ்தூரி மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

சோம்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சோம்பு போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். பிறகு வடிகட்டி அந்த தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சோம்பு தண்ணீர் ஊற்றி ஒரு மிக்ஸியில் குப்பைமேனி இலையை போட்டு அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

[பச்சையாக குப்பைமேனிக் கீரை கிடைக்கவில்லை என்றால் பொடியும் சேர்த்து கொள்ளலாம்.]

இரண்டு ஸ்பூன் குப்பைமேனிக் கீரை சாறு அதிமதுரப் பொடி, மஞ்சள் பொடி, கடலை மாவு அதன் பின் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு எடுத்து கொள்ளவும்.

கழுத்து, முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவிய பிறகு இந்த பேக் போட வேண்டும்.

இந்த பேக்கை முகம், கழுத்து பகுதியில் எல்லா இடமும் படும்படி தடவிக் கொள்ளவும். அப்படியே 15 நிமிடம் கழித்து தண்ணீரில் தொட்டு முகத்தை ஈரம் செய்து மெதுவாக மசாஜ் கொடுத்து பின் கழுவ வேண்டும்.

இந்த பேக்கை தொடர்ந்து வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடிகள் உதிர்ந்து விடும்.

– யாழினி சோமு

You might also like