குரலால் வசீகரிக்கும் உதித் நாராயண்!

வசீகரக் குரல் கொண்ட பாடகர்களில் ஒருவரான உதித் நாராயண் நேபாளத்தில் ஒரு நாட்டுப்புறக் கலைஞராகத் தனது வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார் . பெரும்பாலான நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியுள்ள இவர், 1990-களில் திரைத்துறையில் பாடத்துவங்கினார்.

அதற்குப் பிறகு பாலிவுட்டில் உச்ச நடிகர்களுக்கு குரல் கொடுத்ததையடுத்து இவருடைய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து மிகப்பெரிய வெற்றி அடைந்தன. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய மொழிகள் முழுவதும் தடம் பதித்தார்.

மலையாளத்தில் நடிகர் திலீப் குமாருக்கு இவருடைய குரல் மிகவும் பொருத்தமாக அமைந்தது. திலீப் குமார் படத்தில் கட்டாயம் இவருடைய குரல் இருக்கும் எனக் கூறும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை மலையாளத்தில் இவர் உருவாக்கினார்.

தனித்துவமான குரல் அமைப்பைக் கொண்ட உதித் நாராயண் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.

‘தம்’ திரைப்படத்தில் ‘கண்ணம்மா கண்ணம்மா’ என்ற குத்து பாடலை இவரது குரலில் கேட்கும் போது ஆடாத கால்களும் குத்தாட்டம் போட ஆரம்பித்து விடும்.

காதல் பாடல்களைப் பாடுவதற்கு இவருக்கு நிகர் இவர் மட்டுமே. அந்த அளவிற்குக் காற்றிலேயே வார்த்தைகளைக் காதில் கொண்டு சேர்ப்பார். தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கின்ற முக்கிய இசையமைப்பாளர்களுக்கு இவர் ஒரு முக்கியப் பாடகர்.

நடிகர் ரஜினிகாந்த் – ஸ்ரேயா சரண் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான சிவாஜி படத்தில் இடம் பெற்று இருந்த ‘சஹானா சாரல் தூவுதோ…” பாடலால் உதித் நாராயண் – சின்மயி ஸ்ரீபாதா பாடிய பாடல் மிகவும் இனிமையானது.

பிரபு தேவா – சில்பா செட்டி – மதுபாலா நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான மிஸ்டர் ரோமியோ படத்தில் “ரோமியோ ஆட்டம் போட்ட சுத்தும் பூமி சுத்தாதே… ” என்ற பெப்பி பாடலை ஹரிஹரனுடன் இணைந்து பாடி இருந்தார்.

பிரபுதேவா – நக்மா நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ‘காதலன்’ படத்தில் உதித் நாராயண்- எஸ்.பி. பாலசுப்ரமணியன் இணைந்து பாடிய சூப்பர் ஹிட் பாடலான ‘காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினாள்…’ என்ற பாடலை பாடி அசத்தி இருந்தார். இன்று வரை காதலர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான பாடலாக இது விளங்குகிறது.

நாகார்ஜுனா – சுஷ்மிதா சென் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ‘ரட்சகன்’ படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘சோனியா சோனியா…’ பாடலை உன்னி கிருஷ்ணன், ஹரிணியுடன் இணைந்து உதித் நாராயண் பாடிய இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம்.

ரஜினிகாந்த் முத்து படத்தில் இடம்பெற்ற ‘குலுவாலிலே முத்து வந்தல்லோ…’ பாடலை கே.எஸ்.சித்ரா, கல்யாணி மேனன் உடன் இணைந்து பாடி இருந்தார் உதித் நாராயண்.

ஆர்யா, எமி ஜாக்சன் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான மதராசபட்டினம் திரைப்படத்தில் ‘வாம்மா துரையம்மா…’ பாடலை கொச்சின் ஹனீபா, எமி ஜாக்சனுடன் இணைந்து உதித் நாராயண் பாடி இருந்தார்.

விஜய் – திரிஷா நடிப்பில் வித்யாசாகர் இசையில் வெளியான ‘குருவி’ படத்தில் ‘தேன் தேன் தேன்… உன்னை தேடி அலைந்தேன்…’ பாடலை ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடி இருந்தார்.

தனுஷ் – நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியான ‘யாரடி நீ மோகினி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எங்கேயோ பார்த்த மயக்கம்…’ பாடல் மூலம் வருடி சென்றார்.

விஜய் – திரிஷா நடிப்பில் வித்யாசாகர் இசையில் வெளியான ‘கில்லி’ படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘கொக்கர கொக்கரக்கோ…’ பாடலை சுஜாதா மோகனுடன் இணைந்து பாடி இருந்தார் உதித் நாராயண்.

பிரஷாந்த் – சிம்ரன் நடிப்பில் தேவாவின் இசையில் வெளியான ‘கண்ணெதிரே தோன்றினாள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஈஸ்வரா… வானும் மண்ணும்…’ பாடலை பாடி தெறிக்க விட்டார் உதித் நாராயண்.

இதேபோல் ரன் திரைப்படத்தில் காதல் பிசாசே என்ற இவருடைய உச்சரிப்பு மிகப்பெரிய பேசு பொருளாக ஆனது. 

இதுபோன்று ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய உதித் நாராயண் வசீகரிக்கும் வகையிலான தனித்துவமான குரலைக் கொண்டவர்.

மிகப்பெரிய கூட்டத்தை தன் குரலால் கட்டிப் போடத் தெரிந்த ஒரு சில ஜாம்பவான்களில் இவரும் ஒருவர் என்று கூறினால் அது மிகையாகாது.

You might also like