நக்கீரன் கோபால் ‘பபாஸி’யின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இப்படி ஒரு புகழ்வாய்ந்த மனிதர் பபாஸியின் பொறுப்புக்கு போட்டியிடுவது இதுவே முதல் முறை.
அவரைபோன்ற ஒரு நாடறிந்த ஊடகவியலாளர் பபாஸியின் பொறுப்பு வந்தால் இந்த அமைப்பின் செயல்பாடும் புகழும் எங்கோ சென்றுவிடும்.
அச்சமற்று போராடுகிறவர். சவால்களின்மீது சவாரி செய்பவர். நீதிக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க தயங்காதவர்.
எல்லாவற்றையும்விட பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் வளர்ச்சிக்காக அதிகாரத்தின் எந்த உயர்மட்டதிலும் சென்று பேசக்கூடிய செல்வாக்கும் தொடர்புகளும் மிக்கவர்.
எல்லோரையும் அரவணைத்துச் செல்வதில் அவருக்கு நிகரானவர்கள் அரிது.
நியாயமாக அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும்.
அண்ணன் கோபால் வென்றால் பபாஸியின் முகமும் செயல்பாடும் மிகுந்த உத்வேகம் கொண்டதாக மாறிவிடும்.
- மனுஷ்யபுத்திரன்