அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் நடந்திருக்கிற சில நிகழ்வுகளை வெறும் செய்திகளாக மட்டும் கடந்து போக முடியவில்லை.
முன்பு வேங்கைவயல் கிராமத்தில் உள்ள நீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது மாதிரியே அரசுப் பள்ளி ஒன்றின் நீர்த்தொட்டியிலும் கலக்கப் பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
அதை மாவட்ட ஆட்சியர் மறுத்த நிலையில் அந்த நீர்த்தொட்டியை இடிக்க உத்திரவிடப் பட்டிருக்கிறது.
இதைவிட அதிர்ச்சியூட்டும் விதமாக அண்மையில் ஒரு மாணவியை ஆசிரியை ஒருவரே அசிங்கப்படுத்திக் காலணிகளைத் துடைக்க வைத்திருக்கிறார்.
காரணம் – அவருடைய அப்பா மாட்டு இறைச்சிக் கடை வைத்திருப்பதைச் சொன்னது தான். அந்தப் பள்ளியில் தற்போது விசாரணை நடக்கிறது.
பள்ளி வளாகங்களில் இத்தகைய வன்ம நிகழ்வுகள் நடக்க என்ன காரணம்?
கல்வியைக் கற்றுக் கொடுத்து சமத்துவத்தைக் கற்றுத் தர வேண்டிய பள்ளிகளில் உள்ள ஆசிரியப் பெருமக்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது.