படைப்புகள் மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வேண்டுகோள்

ஒடிசா மாநிலம் பாரிபடாவில் அகில இந்திய சந்தாலி எழுத்தாளர்கள் சங்கத்தின் 36-ம் ஆண்டு மாநாடு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “சுதந்திரப் போராட்டத்தின்போது பல இலக்கியவாதிகள் நமது தேசிய இயக்கத்திற்கு வழி காட்டினார்கள். அதுபோல எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துகள் மூலம் சமூகத்தில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மொழியும், இலக்கியமும் நாட்டை ஒன்றிணைக்கும் நுட்பமான இழைகள்.

மொழிபெயர்ப்புகள் மூலம் பல்வேறு மொழிகளுக்கு இடையே விரிவான பரிமாற்றத்தால் இலக்கியம் வளப்படுத்தப்படுகிறது.

பொழுதுபோக்கு மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய குழந்தை இலக்கியங்களை உருவாக்க வேண்டியதன் அவசியம்” என்று கூறினார்.

அதோடு, அனைத்து இந்திய மொழிகளிலும் சுவாரஸ்யமான குழந்தை இலக்கியங்களை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்” என்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தினார்.

You might also like