இயற்கை நூலின் ஆசிரியர் எம்.ரிஷான் ஷெரீப் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இயற்கை நமக்கு அளித்த மழை, கடல், வனம், நதி, காற்று, கோடை பற்றின தனது தற்போதைய அனுபவங்களைக் கட்டுரைகளாக இங்கு தொகுத்திருக்கிறார்.
பொதுவாக இந்த மாதிரியான இயற்கை எழில் மிக்க இடங்கள் நமக்கு நிறைய அனுபவங்களையும், நியாபகங்களையும் விட்டுச் செல்லும். ஆனால் இவை அனைத்தும் அது அமைதியான நிலையில் இருக்கும்போது தான்.
இயல்பை மீறி தன்னுடைய இன்னொரு முகத்தைக் காட்டும்போது அதை சந்திக்கிற தைரியமோ அல்லது எதிர்கொள்கின்ற துணிவோ நமக்கு இருக்காது.
எத்தனை பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் கூட அதை நெருங்க முடியாது. இயற்கையோட சக்தியும் அதுதான்.
நூலின் ஆசிரியர் ஒவ்வொரு பூதங்களுக்கும் தனிதனியான கட்டுரைகள் எழுதினது மட்டும் அல்லாமல் நிறைவாக அதற்கு பாடலும் எழுதியுள்ளார்.
நமக்கு தெரியாத புதிய தகவல்கள் எதுவும் இதில் இல்லை என்றாலும் சலிப்பு ஏற்படாத வண்ணம் அழகாக கொண்டு வந்திருக்கிறார்.
முக்கியமாக நதி, கோடை பற்றிய கட்டுரைகளில் அளவான ஒரு சோகம் இழையோடிருக்கும். அறிமுக வாசிப்பாளருக்கு ஏற்ற நூல்.
ஒரு நல்ல இயற்கை வழி பயணம் போன அனுபவத்தைத் தரும் இந்நூல், பல பால்யகால நினைவுகளைத் தோண்டி மீட்டெடுக்கின்றது.
நூலில் “நான் தவறான பாதையில் பயணித்து எது சரி, எது தவறு என்று உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்” என்கிறார். ஒரு சஞ்சாரியாக இயற்கையைத் தேடியலையும் எனது ஜீவிதப் பயணத்தில் நான் கண்ட மழை, கடல், வனம், நதி, காற்று, கோடை ஆகியவற்றின் அனுபவப் பதிவுகளே இந்த நூல்” என்று குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர் எம்.ரிஷான் ஷெரீப்.
– திருநாவுக்கரசு
புத்தகம்: இயற்கை
ஆசிரியர்: எம்.ரிஷான் ஷெரீப்
பதிப்பகம்: கிண்டில் பதிப்பகம்
விலை: ரூ.49