உலகப் புகழ்பெற்ற ரஷ்ய நாவலாசிரியர் ‘வாழ்க்கை’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலின் ஆரம்பத்தில் ஆசிரியர் ‘வாழ்க்கை என்பது என்ன?’ என்ற கேள்விக்குப் பதில் கூறுகிறார்.
நூலின் முடிவில், மரணத்தைப் பற்றி ஆராய்ந்து, ‘மரணம் என்பது என்ன?’ என்பதை விளக்கியுள்ளார்.
நூலாசிரியரின் அரிய ஆராய்ச்சிகளில் ஒன்று. அவருடைய மற்ற நூல்களுக்கும், அவருடைய வாழ்க்கைக்கும் இதை ஒரு திறவுகோல் என்று சொல்லலாம்.
”இந்த நூல் சொல்லுக்குச் சொல்லாக மொழி பெயர்க்கப் பெறவில்லை. ஆசிரியரின் கருத்துக்களையே சுருக்கி எழுதியுள்ளேன்.
எவ்வளவு தெளிவாக எழுதினாலும், விஷயம் பெரிதாகையால், ஒவ்வொரு வரியையும் படித்த பிறகு சிந்தனை செய்து பார்த்தால்தான் பொருள் விளங்கும்” என முன்னுரையில் மொழிபெயர்ப்பாளர் ப. ராமஸ்வாமி கூறியுள்ளார்.
நூல் : வாழ்க்கை
ஆசிரியர் : லியோ டால்ஸ்டாய்
மொழிபெயர்ப்பாளர் : ப. ராமஸ்வாமி
பதிப்பகம் கிண்டில் பதிப்பகம்
விலை : ₹49.00