லா.சா.ராவின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் சிந்தாநதி!

1989-ல் லா.சா.ரா என்று அழைக்கப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் அவர்களுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றுத்தந்த, நாட்டுரிமையாக்கப்பட்ட சுயசரிதை கட்டுரைகள் தொகுப்பு தான் இந்த சிந்தா நதி.

80 களில் தினமணி கதிரில் தொடர்கதையாக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம்.

லா.சா.ரா அவர்களின் வாழ்க்கையின் நினைவுப்பக்கங்களை புரட்டியிருக்கிறார் இந்த கட்டுரைத் தொகுப்பாக.

அவரின் இளமைக்காலம், எழுத்தாளர்கள் நட்புக்காலம், கடந்து வந்த மனிதர்கள், வாழ்க்கை நிகழ்வுகள், எழுத்தாளர்களுக்கே உரிய சிக்கலான தத்துவமான எண்ணவோட்டங்களின் பிரதிபலிப்பாக சில கட்டுரைகள் என மொத்தம் 48 கட்டுரைகள் உள்ளன. 

“புழுவின் முதுகு வெடித்து பட்டாம்பூச்சி” என்பது போன்ற உவமைகள் அழகு.

‘நேர்த்தியின் நியதிகள்’ மிகவும் ரசிக்கும் வகையிலான கட்டுரை.

நூலில் இடம்பெற்றுள்ள “அம்மா என்றால் ஒரு அம்மா தான்.. உன் அம்மா, என் அம்மா, தனித்தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா.” என்ற வரிகள் மிகவும் அழகானது.

புத்தகம் : சிந்தா நதி
ஆசிரியர் : லா.சா.ராமாமிருதம்
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள்: 300

– நன்றி: முகநூல் பதிவு 

You might also like