வள்ளுவர் என்ற மாபெரும் ஜோதிடர்!

– டிஸ்கவரி வேடியப்பன்

ஒருவர் அழைத்தார். பேசினேன். எழுத்தாளர் என்று அறிமுகம் செய்துகொண்டார். கூடுதல் கவனத்தோடு பேசினேன் என ஓர் எழுத்தாளரோடு நடத்திய உரையாடலை சுவாரசியமாக பேஸ்புக் பதிவில் எழுதியிருக்கிறார் பிரபல பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன்.

சிறிதுநேர உரையாடலுக்குப் பிறகு, அவரின் நூல்கள் வெளியிடுவது தொடர்பாக விசாரித்தார். 2024 ஜனவரி புத்தகக் காட்சிக்குப் பிறகு அழைத்தால் அப்போது விரிவாகப் பேசுவோம் என்றேன். அவருடனான உரையாடலுக்கு நான் முற்றுப்புள்ளி வைத்ததைப் போல அவர் உணர்ந்திருக்கலாம்.

தாமதிக்காமல் எனது பெயர், அப்பா பெயர், ஆங்கிலத்தில் உங்கள் பெயரை எப்படி எழுதுவீர்கள் மற்றும் பிறந்த தேதி என எல்லாவற்றையும் வரிசையாகக் கேட்டார்.

அதனாலென்ன என்று எல்லாவற்றையும் சொன்னேன். ராகு, கேது, சனி, ஞாயிறு, திங்கள் என்று ஏதேதோ கணக்கு போட்டுக்கொண்டு இருந்தார்.

கடைசியில் “உங்கள் பிறந்த தேதிபடி..” என்று உற்சாகமானார். என்னைப்பற்றி, என் எதிர்காலம் பற்றி உரையாற்றத் தொடங்கினார்.

இடைமறித்து ”சார், எல்லாம் நல்லாதான் சார் இருக்கும்..” என்றேன்.

சிறிது நேரம் ஸ்தம்பித்து போனவர்போல அமைதியாக இருந்தவர், பிறகு ”எப்படி சொல்றீங்க?” என்றார்.

நான்தானே சார் உழைக்கிறேன். எனக்குத் தெரியாதா?.

மீண்டும் அமைதி.

இந்தமுறை நான்தான் அவரது மௌனத்தை உடைத்து.

வேடியப்பன்

“சார், எனக்கொரு ஜோதிடர் இருக்கிறார்” என்றேன்.

 “யார்? அவர் பேரென்ன?” என்று கேட்டார்.

எனக்குத் தெரியாமல் நிச்சயமாக யாரும் இருக்க முடியாது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் பெயர் திருவள்ளுவர். அவர் சொல்லி இருக்கிறார்.
’’ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை ‘’

எப்படி சார், வித்தக்காரர்தானே? – என்றேன்.

ஒப்புக் கொண்டார்.

You might also like