பல பத்திரிகைகளில் வெளியான திரு. ஆன்டன் செக்காவ் அவர்களின் கதைகளின் தொகுப்பு இந்நூல்.
பேச்சாளர் என்னும் கதை, இறந்தவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் அந்த மனிதரைக் குறித்து புகழாரம் சூட்டும் பேச்சாளர் ஒருவர், ஒருவரது இறுதிச் சடங்கில், வேறொருவரது பெயரைச் சொல்லி அதாவது, பெயரை மாற்றிச் சொல்லி விடுகிறார்.
அந்தப் பெயர் கொண்டவரோ புகழுரைகளுக்கெல்லாம் நேர்மாறான குணம் கொண்டவர். அதாவது, உயிருடன் இருக்கும் ஒருவரை வானளாவ புகழ்வது கேலி செய்வது போல் இருப்பதை நகைச்சுவையுடன் கூறி இருப்பார்.
“இறந்தவரைப் பற்றி நல்லதாகப் பேச வேண்டும் அல்லது பேசாமல் இருக்க வேண்டும்”. உண்மையான வாசகங்கள்.
மாப்பிள்ளையும் அப்பாவும் கதையில், செல்வந்தர் ஒருவரின் மகளை மணக்க விருப்பமில்லாதவன், தனக்கு பைத்தியம் என்று சான்றளிக்க, மருத்துவரை நாடுகிறான்.
அவர் சொல்கிறார், “எவன் ஒருவன் மணம் செய்துகொள்ள விரும்பவில்லையோ அவன் புத்திசாலி. திருமண ஆசை வருகையில் அப்போது தான், சான்றிதழ் பெற சரியான தருணம்” என ஹாஸ்யமாய் முடிகிறது கதை.
சிகரெட் பிடிக்கும் ஏழு வயது சிறுவனுக்கு, அவன் தவறை உணர வைக்கும் கதை சிறப்பு.
ஒவ்வொரு கதையிலும், கருத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. கூடவே, நகைச்சுவையும். இனிமையான வாசிப்பு அனுபவம்.
புத்தகம் : ஆன்டன் செக்காவ் – ஆகச் சிறந்த சிறுகதைகள்
தமிழில் : திரு. சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர்
வெளியீடு : தடாகம்
ஆண்டு : நவம்பர் 2019
பக்கங்கள் : 146
விலை : ₹114
நன்றி: வாசிப்பை நேசிப்போம் முகநூல் பதிவு.