மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில், டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
சிறப்பாக விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களும் ஷ்ரேயாஸ் 82 ரன்களும் அடித்தனர்.
இலங்கை வீரர் தில்சன் மதுஷங்கா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அதன் பின் 358 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை தொடக்கம் முதலே விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.
தொடக்க ஆட்டக்காரகள் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து வந்தவர்களும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
அந்த அணியில் கசூன் ரஜிதா அடித்த 14 ரன்கள் அதிகபட்ச ரன்னாக இருந்தது. இதனால் இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 55 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
இதன் வாயிலாக உலகக் கோப்பைகளில் 3 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் சாதனையை சமன் செய்தார் முகமது ஷமி.
முகமது ஷிராஜ் 3 விக்கேட்டுகளை வீழ்த்தினார்.
இந்தத் தொடரில் இலங்கை அணியை வீழ்த்தியன் மூலம், இந்தியா 14 புள்ளிகள் பெற்று 7 வெற்றிகள் உடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை மீண்டும் கைப்பற்றியது.
அதோடு உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றுள்ளது.