சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் தர மறுக்கும் ஆளுநர்: சில விளைவுகள்!

நூறு வயதைக் கடந்திருக்கிற பொதுவுடமைவாதி சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்காத அணுகுமுறை பலரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

மிக அண்மையில் தான் சுதந்திரப் போராட்ட வீர‍ர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய மதிப்பு கொடுக்கவில்லை என்று புகார் கூறியிருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பல மசோதாக்கள் அவருடைய அனுமதிக்காக‍க் காத்திருக்கின்றன.

சங்கரய்யாவுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான அனுமதியும் அதில் ஒன்று.

சுதந்திரப் போராட்ட வீர‍ர்களுக்கு மதிப்புக் கொடுப்பதைப் பற்றிப் பேசியவர் இவ்வளவு மூத்த போராட்ட வீர‍ருக்கு எதனால் மதிப்பளிக்க மறுத்தார்? என்கிற கேள்வியுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்திருக்கிறார் உயர் கல்வி அமைச்சரான பொன்முடி.

“ஒரு சுதந்திரப் போராட்ட வீரருக்கு, ஒரு பொதுவுடைமைவாதிக்கு 102 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்காத‍தற்குக் காரசம் என்ன? சொல்லச் சொல்லுங்கள்’’ என்றிருக்கிற அமைச்சர் பொன்முடி ஆளுநரை ‘நடிப்புச் சுதேசி’ என்றும் சொல்லித் தான் புறக்கணித்த காரணத்தை விளக்கியிருக்கிறார்.

மதுரையில் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருக்கிற ஆளுநர் ரவிக்கு எதிராக‍க் கறுப்புக் கொடி ஏந்திய ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி.
ஒரு தலைவர். ஒரு மறுப்பு. இதில் சிவப்பு, காவி, கறுப்பு என்று எத்தனை நிறங்கள் கலந்திருக்கின்றன?

*

You might also like