இனிஷியல் வைத்து அழைக்கும் வழக்கம் வந்தது எப்படி?

கம்யூனிஸ்ட் தலைவர்களை முழுப்பெயருடன் அழைக்காமல் அவர்களது ஆங்கில இனிஷியல்களையே பயன்படுத்தவது ஏன் என்று பலரும் கேட்கிறார்கள்.

கட்சி தடைசெய்யப்பட்டு அடக்குமுறைக் காலங்களில் ரகசியமாய் பெயர் வைத்துக் கொள்வதுண்டு. கட்சித் தோழர்களிடமும் பெயர் சொல்லாமல் இனிஷியலைச் சொல்லும் நடைமுறை அப்போது தான் வந்தது.

அப்பாவித் தொண்டர்கள் சிலர் செந்துண்டு, செஞ்சட்டை அணிந்து சென்றால் போலீசு பிடிக்கும்; அடிக்கும்.

எனவேதான் செந்துண்டு, செஞ்சட்டை அணிய வேண்டாமென தோழர்களை கட்சி எச்சரித்தது. ஜனநாயம் திரும்பினாலும் சில பழைய நடைமுறைகள் தொடர்கின்றன. நானும் எஸ்ஏபி ஆனதும் இப்படித்தான்.

நன்றி: எழுத்தாளர் எஸ்ஏ பெருமாள் பேஸ்புக்

You might also like