ஒன்றுபடுத்திய மருதநாட்டு இளவரசி!

டிவி.சாரி என்ற கதை, வசன கர்த்தா எழுதி, இயக்கி ‘காளிதாஸ்’ என்னும் பெயரில் படப்பிடிப்பும் தொடங்கியது. ஆனால் இடையில் அதன் வளர்ச்சித் தடைபட்டு நின்று போனது.

அந்தப் படம் தான், மருதநாட்டு இளவரசி என்று மறுபெயர் சூட்டப்பெற்று மு. கருணாநிதி எழுதி, எம்.ஜி.ஆர். – வி.என். ஜானகி நாயகன் நாயகியாக நடித்து, கோவை ஜூபிடர் பிக்சர்ஸில் எடிட்டராகவும் துணை இயக்குநராகவும் பணிபுரிந்த ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளி வந்தது.

மருதநாட்டு இளவரசி படம் மைசூர் நவஜோதி ஸ்டியோவில் படமாக்கப்பட்ட நாட்களில்தான் அதில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., வி.என். ஜானகி இருவடைய இதயங்களும் ஒன்றுபட்டுக் கணவன், மனைவியாகக் கரம்பற்றினர்.

இந்த மருதநாட்டு இளவரசி வெளியான பிறகுதான் மு. கருணாநிதி என்ற திரைப்படக் கதை, வசனகர்த்தா முழுமையாக அறிமுகமாகிப் பட உலகில் அங்கீகாரம் பெற்றார்.

இந்த மருதநாட்டு இளவரசியைப் பார்த்த பின்னர்தான், மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம், பாடலாசிரியர்களான அ.கருதகாசி, கவி. கா.மு.ஷெரீப் சொன்னதன் பேரில் ‘மந்திரிகுமாரி’ நாடகத்தைப் படமாக்கவதற்காக திருவாரூரில் இருந்த மு. கருணாநிதியை சேலத்துக்கு அழைத்தார்.

இந்த மருதநாட்டு  இளவரசிக்குள் இத்தனை கதைகள் இருக்கின்றன.

– நன்றி: கலை வித்தகர் ஆரூர்தாஸ் எழுதிய ‘சினிமா கலைக்களஞ்சியம்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

You might also like