சனாதனம் பேசுவோர் கவனத்திற்கு…!

திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்தக் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. கோவிலுக்குள் செல்லும் ஆண்கள் வேட்டி அணிந்திருக்க வேண்டும். மேலாடை அணியக் கூடாது. பெண்கள் சேலை அணிந்திருக்க வேண்டும். சுடிதார் உள்பட நாகரீக ஆடைகளை அணியக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன.

அதோடு, இந்து மதம் அல்லாத பிற மதத்தினர் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் பத்மநாபசாமியின் உண்மையான விசுவாசி என்பதை எழுதிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பத்மநாபசாமி கோவிலில் ஐப்பசி மாதத் திருவிழா நாளை (அக்டோபர் 14) கொடியேற்றத்துடன் தொடங்கி, 23-ம் தேதி வரை நடக்கிறது.

திருவிழா தொடங்குவதையொட்டி கோவிலில் தலைமை தந்திரி தலைமையில் மண்ணு கோரல் சடங்குகள் நடைபெறுவது வழக்கம். இந்த பூஜை நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

அன்றைய தினம் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தது பின்னர் தெரியவந்துள்ளது. இதனால் மண்ணு கோரல் சடங்குகள் மீண்டும் நடத்த கோவில் தந்திரி உத்தரவிட்டார். அதன்படி நேற்று மீண்டும் சடங்குகள் நடைபெற்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் சனாதனக் கோட்பாடுகள் எங்கே பின்பற்றப்படுகின்றன என்று கேட்பவர்களுக்கு, சனாதன எதிர்ப்பாளர்கள் இது பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர். 

You might also like