ஜப்பானிய மொழியில் இகிகை (Ikigai) என்ற புத்தகம் பிரபலம். அங்குள்ள ஒக்கினாவா தீவில்தான் உலகிலேயே நீண்ட ஆயுள் கொண்ட மனிதர்கள் அதிகம்.
அதற்கு காரணம் என்ன என்று அவர்கள் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆராயப்பட்டன.
இறுதியில் நீண்ட ஆயுளுக்குக் காரணம் அவர்கள் அனைவருக்கும் வாழ்வில் குறிக்கோளுடன் வாழ்ந்தனர் என கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருந்தது. ஜப்பானிய மொழியில் இகிகை என்றால் reason to live என அர்த்தம்.
நான் படித்தவரை எனக்குப் பிடித்த மூன்று நபர்கள் நீண்ட காலம் வாழ்ந்தவர்கள் பட்டியலில் உள்ளனர்.
1. பாப்லோ பிகாஸோ (92 ஆண்டுகள்) 2. பெரியார் (94) ஆண்டுகள் 3. கலைஞர் (94 ஆண்டுகள்)
இவர்கள் கொண்டிருந்த இகிகை இவர்களுக்கு நீண்ட ஆயுளை அளித்திருக்கிறது.
எல்லோருக்கும் வாழ ஆசை உண்டு. ஆனால் எல்லோருக்கும் இகிகை உண்டா கலைஞரைப் போல?
– நன்றி: அந்தி மழை, செப்டம்பர் 2023 இதழ்.