படித்ததில் ரசித்தது:
அந்தச் சிறு குழந்தையைப் பார். தூக்க முடியாமல் ஒரு பெரிய தவலை தண்ணீரைத் தூக்கிக் கொண்டு போகிறது.
இத்தனை பெரிய தவலை தண்ணீரில் அது எத்தனை குடித்துவிடப் போகிறது? மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாலஞ்சு டம்ளர்? மீதி எல்லாம் யாருடைய பயன்பாட்டிற்கோதானே? அந்தக் குழந்தையை மிரட்டியோ, நைச்சியமாகப் பேசியோ அனுப்பியிருக்கிறார்கள். அதுவும் சுமந்து கொண்டு போகிறது.
அந்தக் குழந்தை நினைத்திருந்தால், பாதித் தவலைத் தண்ணீரைக் கொட்டி விட முடியாதா? இல்லை, தண்ணீரே கிடைக்கவில்லை என்று பொய் சொல்ல முடியாதா?
அப்படி எல்லாம் செய்யலாம் என்று அதற்குத் தோன்றவே தோன்றாது என்பதுதான் அந்தக் குழந்தையை அனுப்புகிறவர்களின் பலம்.
‘குடும்ப பாரத்தைச் சுமப்பது என்ற பெயரில், அன்பு என்றோ, பொறுப்பு என்றோ சொல்லி அன்பில்லாதவர்களாலும், பொறுப்பில்லாதவர்களாலும் கசக்கிப் பிழியப்படுகிறவர்கள் பலர்.
– அசோகமித்திரன்