என் வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் கலைவாணர்!

– நகைச்சுவை நடிகர் கே.ஏ. தங்கவேலு

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக் குழுவில் பட்டை தீட்டப்பட்டவரான கே.ஏ. தங்கவேலு, நகைச்சுவை நடிப்பிலும், குணச்சித்திர நடிப்பிலும் கொடி கட்டிப் பறந்தார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் நடித்த பல படங்களில் நடித்தவர். சக்ரவர்த்தி திருமகள், உத்தமபுத்திரன், குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும், கற்புக்கரசி, மங்கையர் திலகம், அமரதீபம், கல்யாண பரிசு, எங்கவீட்டு பிள்ளை உள்பட 800 படங்களுக்கு அதிகமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக, கல்யாணப்பரிசு படத்தில் எதற்கெடுத்தாலும் பொய் சொல்லும் டூப் மாஸ்டராகத் தோன்றி ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்தார்.

தமிழ்ப்படங்களில் வந்த 10 சிறந்த நகைச்சுவைக் காட்சிகளைத் தேர்ந்தெடுத்தால், அதில் கல்யாணப்பரிசு தங்கவேலுவின் நகைச்சுவை நிச்சயம் இடம்பெறும்.

“என் 20 வது வயதில், கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்து அவருடைய பணம் படத்தில் 60 வயது காரராக நடிக்க வைத்து என் வாழ்க்கைக்கு வழிகாட்டினார்” என தங்கவேலு ஒருமுறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like