மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள். காரணம், மற்ற படங்களில் கிடைப்பதை விட, அவர் நடிக்கும் படங்களில் கூடுதலான சம்பளம் கிடைக்கும்.
அதோடு, பேசியபடி சக கலைஞர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்டதா என்பதை எம்.ஜி.ஆர். உறுதிப்படுத்திக் கொள்வார்.
எம்.ஜி.ஆர். நடித்த ஒரு படத்தில் நடிக்க வி.எஸ்.ராகவனுக்கு குறிப்பிட்ட தொகை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு தயாரிப்பு தரப்பில் இருந்து வி.எஸ்.ராகவனுக்கு கோரிக்கை விடப்பட்டது.
அவருக்கோ தர்மசங்கடம். தனது நிலையை கவிஞர் வாலியிடம் கூறினார். உடனே, வாலி ஒரு யோசனை கூறினார்.
அந்த யோசனையை வி.எஸ்.ராகவன் செயல்படுத்தினார்.
வாலியின் யோசனைப்படி தயாரிப்பு தரப்பிடம் வி.எஸ்.ராகவன் ஏவிய அஸ்திரம் இதுதான்.
‘‘என் சம்பளம் எம்.ஜி.ஆரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் முடிவு செய்த தொகையைவிட குறைவாக நான் வாங்கிக் கொண்டால் அவர் வருத்தப்படுவார். அவருக்கு நான் என்ன பதில் சொல்வது?’’ என்றார்.
மறுபேச்சு இல்லாமல் ஏற்கனவே பேசிய சம்பளமே அவருக்கு கிடைத்தது.
– நன்றி: முகநூல் பதிவு