திரைக்கலைஞர் சிவகுமாா் பேச்சு:
பல்லடத்தில் உள்ள வனாலயத்தில் நடிகா் சிவகுமாரின் திருக்குறள் உரை திரையிடல் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் வள்ளுவா் வழியில் வாழ்ந்தவா்களின் வரலாற்றை நூறு திருக்குறள்களோடு பொருத்தி அதை காணொலியாக திரையிடப்பட்டது.
திரைக்கலைஞர் சிவகுமாா் தனது வாழ்வில் சந்தித்த இயக்குநா்கள், நடிகா்கள், நண்பா்கள், குடும்ப உறவுகள் என 100 பேரின் வாழ்க்கையை திருக்குறளோடு ஒப்பிட்டு இந்த காணொலியை வெளியிட்டாா்.
திரையிடலுக்கு முன் சிவகுமாா் பேசும்போது, படைப்புக் கடவுளாக இருப்பவா்கள்தான் பெண்கள். ஏனெனில் இந்த உடலைக் கொடுத்தவா்கள் தாயாக விளங்கும் பெண்கள் தான்.
உலகில் கணவரை இழந்து தனியாக வாழும் பெண்களைப் பாா்க்கலாம். ஆனால் மனைவியை இழந்து 50 ஆண்டு வாழ்பவா்கள் யாரும் இருக்க முடியாது. மனைவி என்பவள் இரண்டாவது தாய். 50 வயது கடந்த அனைத்து ஆண்களுக்கும் அவரவா் மனைவிதான் இரண்டாம் தாய்.
எனது உயிா் எனது மனைவியின் மடியில் தான் போக வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட தாயை வணங்குங்கள். நான் எனது மனைவியை அப்படித்தான் வணங்கி வருகிறேன்” என்றாா்.