பாதையைப் புரிந்து பயணிப்போம்!

நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
உயிர் மூச்சை உள்ளடக்கி
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை – அதுவும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும்
திருக்குறளை மறவாதே திருக்குறளை மறவாதே
திசை தவறிப் போகாதே ஏ ஏ ஏ ஏ ஏ
***************************************
வாழ்க்கை எனும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்க ஒண்ணா வேதம்

(வாழ்க்கை)

வாலிபம் என்பது கலைகின்ற வேடம் அதில்
வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்
வரும் முன் காப்பவன் தான் அறிவாளி
புயல் வரும் முன் காப்பவன் தான் அறிவாளி
அது வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி

(வாழ்க்கை)

துடுப்புகள் இல்லா படகு
அலைகள் அழைக்கின்ற திசை எல்லாம் போகும்
தீமையை தடுப்பவர் இல்லா வாழ்வும்
அந்த படகின் நிலை போலே ஆகும்

(வாழ்க்கை)

– 1964-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பில் வெளிவந்த ‘பூம்புகார்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் மு.கருணாநிதி. இசை-ஆர்.சுதர்சனம். குரல்-கே.பி.சுந்தராம்பாள்.

You might also like