நடைப்பயிற்சிக்கு, உடல் எடையைக் குறைப்பதற்கு, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு என பல காரணங்களுக்காக நாம் உடற்பயிற்சி மேற்கொள்கிறோம்.
அந்த வகையில் பின்னோக்கி நடைப்பயிற்சியை (backward walking) மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை இந்தப் பதிவில் காணலாம்.
100 அடிகள் பின்னோக்கி நடப்பது 1000 அடிகள் முன்னோக்கி நடப்பதற்கு சமம் என்று கூறப்படுகிறது. இதனை செய்வதால் உடலின் சமநிலை மேம்படுகிறது.
குறிப்பாக மூட்டுவலி ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.
முன்னால் நடக்கும் போது அதிகமாகப் பயன்படுத்தப்படாத தசைகள் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்யும் போது பயன்படுத்தப்படுகின்றன.
Rectus femoris மற்றும் vastus medialis ஆகிய தொடை தசைகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. மேலும் அறிவுத்திறனை வளர்ப்பதாக ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மன அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் பின்னோக்கி நடக்கும்போது தசைகள் கடினமாக வேலை செய்வதால், வழக்கமான நடைப்பயணத்தை விட 40% அதிக கலோரிகள் எரிக்கப்படுவதாக அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் (ACSM) தெரிவித்துள்ளது.
மூளை செயல்பாடுகளை உத்வேகப்படுத்தவும், சிந்தனைத் திறன் மேம்படவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– சங்கீதா