நடிகர்கள் தனுஷ், சிம்பு உள்ளிட்ட 4 பேருக்கு ரெட் கார்ட்!

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் நடிகர் தனுஷ், சிம்பு உள்ளிட்ட நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்ட் விதிக்க முடிவு எடுக்கப்பட்டது.

சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார் அளித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவடையாத மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை மேற்கோள்காட்டி சிம்புக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.

அடுத்து நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக கையாளாது தொடர்பாக ரெட் கார்ட் போடப்பட்டது.

நடிகர் தனுஷ் தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக ரெட் கார்ட் விதிக்கப்பட்டது.

தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வா முறையாக பதிலளிக்காமல் நழுவுவதால் அதர்வாவுக்கும் ரெட் கார்ட் போடப்பட்டுள்ளது.

You might also like