அண்ணாவிடம் எம்.ஜி.ஆரை அறிமுகப்படுத்திய டி.வி.நாராயணசாமி!

டி.வி. நாராயணசாமி: 100

பராசக்தி துவங்கி மணிமகுடம், திருவிளையாடல் எனப்பல திரைப்படங்களில் இவருடைய முகத்தைப் பார்த்திருக்கலாம்.

தென்னிந்திய நடிகர் சங்கம் துவக்கப்பட்டபோது அதற்காக உழைத்தவர்களில் இவரும் ஒருவர்.

பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி என்று பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான பழக்கம் கொண்ட இவர்தான் அண்ணாவிடம் எம்.ஜி.ஆரை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தவர்.

டி.வி.என். என்றழைக்கப்பட்ட டி.வி. நாராயணசாமியின் பங்களிப்பைப் பற்றி அடிக்கடி எழுத்திலும், பேச்சிலும் ‘தன் வாழ்வில் வெளிச்சம் ஊட்டியவராக’ச் சிறப்பாக‍க் குறிப்பிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

காங்கிரஸ் கார‍ராக இருந்த மக்கள் திலகத்தைத் திராவிட உணர்வாளராக மாற்றியது டி.வி.என் மூலம் உருவான சந்திப்புகள் தான்.

லட்சிய நடிகரான எஸ்.எஸ்.ஆரின் உறவினரான டி.வி.என்.னுக்குத் தற்போது நூற்றாண்டு.

அதற்கான விழா அண்மையில் சென்னையில் நடந்தபோது – திரையுலகம், அரசியல் இயக்கங்கள் சார்ந்த பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

விழாவில் டி.வி.என் – நூற்றாண்டுச் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. மலரின் முகப்பில் டி.வி.என்.னின் அந்தக் காலப் புகைப்படம்.

2000 ஆம் ஆண்டில் மறைந்த டி.வி.என் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நூற்றாண்டுத் தருணத்தில் ‘நடிகமணி’ என்றழைக்கப்பட்ட டி.வி.என். அவர்களை நினைவுகூர்வோம்.

*

படங்கள் உதவி ஞானம்

You might also like