விதிமுறைகளைக் காற்றில் பறக்க விடும் வடஇந்தியர்கள்!

ரயிலைப் பயன்படுத்துவதில் தென்னிந்தியர்களுக்கும், வடஇந்தியர்களுக்கும் மலையளவு வித்தியாசம் இருப்பதை கண்கூடாக பார்க்க முடியும்.

குறிப்பாக ரயில் மூலம் இந்தியா முழுவதும் பயணிப்பவர்கள், தமிழ்நாட்டிற்குள் ரயில் நிலையங்கள் – ரயில் பெட்டிகள் ஆகியவற்றின் பயன்பாடு, விதிகளை பின்பற்றுவதில் உள்ள ஒழுக்கம், தமிழ்நாட்டை தாண்டியதும் காற்றில் பறப்பதையும்

டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையும், முன்பதிவு செய்த பெட்டியில் கூட வடஇந்தியர்கள் ஏறி அமர்ந்து கொண்டு அழும்பு செய்வதையும் அறிந்துள்ளோம்.

அறிவியல்பூர்வமாக ஏதேனும் அவர்களிடம் பேச முற்பட்டால் குழுவாக வசைபாடுவதும் அவர்களின் வாடிக்கையாக உள்ளது.

வடஇந்தியர்களை மட்டம் தட்டும் பதிவாக இதனை பார்க்க வேண்டாம். ரயிலில் ஏறி அவர்களுடன் சண்டையிட்டு பலமுறை ரயிலில் இருந்து இறங்கி பேருந்துகளில் பயணித்த அனுபவத்தில் சொல்கிறேன்.

மதுரையில் இன்று காலை ஏற்பட்ட ரயில் விபத்தில் 9 பேர் உயிரிழந்த விபத்தின் பின்னணியிலும் இத்தகைய விதிகளைப் பின்பற்றாமை தான் மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் எடுத்து செல்லக்கூடாது என்பது விதி. ஆனால் வடஇந்தியாவில் இருந்து ஆன்மிக சுற்றுலாவாக வந்தவர்கள் தாங்கள் சமைத்து சாப்பிட ரயில் பெட்டிக்குள் கியாஸ் சிலிண்டரையும் சேர்த்தே எடுத்து வந்துள்ளனர்.

சுற்றுலா ரயில்களில் டிக்கெட் கட்டணத்துடன் உணவுக்கும் சேர்த்து கட்டணம் செலுத்தினால் நாம் விரும்பும் உணவு, விரும்பும் ஊரில் கிடைக்க ஏற்பாடு செய்வார்கள்.

இதற்கெனவே ரயில்வே கேட்டரிங் என்ற மாபெரும் சங்கிலித் தொடர் இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. ரயிலில் பயணிப்பவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.

ஆனால் தங்கள் விருப்பப்படி நினைத்த இடத்தில், நினைத்த விதத்தில் சமைத்து சாப்பிடலாம் என்று தப்புக் கணக்கிட்டு ரயில் பெட்டிக்குள் கியாஸ் சிலிண்டரை கொண்டு வந்துள்ளனர்.

இதற்கு எப்படி முதலில் அனுமதி கிடைத்தது என்பதும் ஆச்சர்யமாக உள்ளது. ஏதேனும் சிறு விபத்து ஏற்பட்டாலும் ஒரு பெட்டிக்குள் உள்ள அனைவருமே பாதிக்கப்படுவார்களே என்ற எண்ணமும் அதனை கையாண்டவர்களுக்கு இல்லை.

அப்படிப்பட்ட பொது சிந்தனை அவர்களுக்கு இருப்பதில்லை என்பதையும் என் அனுபவத்தில் கண்டுணர்ந்துள்ளேன்.

ஒருவேளை அந்த சுற்றுலா ரயில், மதுரையின் பிரதான ரயில் நிலையத்திற்குள் நின்று கொண்டிருக்கும் போது இந்த விபத்து நிகழ்ந்திருந்தால், அது எத்தனை பெரிய பேரிடராக இருந்திருக்கும்.. இனியாவது வடஇந்திய ரயில் கோட்டங்கள், ரயிலை எப்படி விதிகளின் படி பயன்படுத்துவது என அவர்களுக்கு பாடமெடுக்க வேண்டும்.

அதாவது விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.. இல்லையென்றால் அவர்களுக்கும் தீங்காக முடிந்து, அடுத்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்..

கடவுளை தரிசிக்க வந்தவர்கள், தீக்கிரையாகி உள்ளனர். நெருப்பில் வெந்து உயிரிழப்பது இறப்பினும் கொடியது. நெஞ்சு பதறுகிறது.

நன்றி; அரவிந்த் குமார் முகநூல் பதிவு

You might also like