– எழுத்தாளர் இந்திரன்
“மனிதன் மகத்தான சல்லிப் பயல்” எனும் ஜி . நாகராஜன் வார்த்தை சிலாகிக்கப்பட்டு திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதில் எனக்குச் சம்மதம் இல்லை.
சில நேரங்களில் சில மனிதர்கள் சல்லிப் பயல்களாக நடந்து கொள்வது உண்மைதான். ஆனால் அதை வைத்து எல்லோருமே எப்போதுமே நம்பத் தகுந்தவர்கள் அல்ல என்ற முடிவுக்கு நாம் வரக்கூடாது.
அப்படி வந்து விட்டால் அது ஒரு விஷக் கிருமியைப் போல பரவி மனித குலத்தை அழித்து விடும்.
எல்லோரிடத்திலும் சுயநலத்தை பார்க்க நாம் பழக்கப்பட்டு விடுகிறோம். நம்மை அறியாமலேயே நாம் அனைவரும் சல்லிப் பயல்களாக நடந்து கொள்ளத் தொடங்கி விடுகிறோம்.
நிதானமாக யோசித்துப் பார்த்தால் உண்மை வேறுவிதமாக இருக்கிறது.
பெரும்பாலான மனிதர்கள் பெரும்பாலான நேரங்களில் நல்லவர்கள் தான்.
பல நேரங்களில் சாதாரண மனிதர்கள் கூட கடவுள்களைப் போல உன்னதமாக நடந்து கொள்வதை நான் பார்த்து இருக்கிறேன்.
அன்பும் நேர்மையும் உண்மையும் கொண்ட ஒரு மனித குலத்தை நாம் கட்டி எழுப்ப வேண்டும் என்றால் கட்டுக்கதைகளை நம்பி சக மனிதர்களை எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதை நிறுத்த வேண்டும்.
சக மனிதர்களை நேசிப்பதன் மூலமாக, சக மனிதர்களை நம்புவதின் மூலமாக சாதி மத இன பேதங்களைக் கடந்து உண்மையோடும் உத்தமத்தோடும் வாழத் துடிப்பவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு உலகத்தை நாம் கட்டி எழுப்ப முடியும்.
நன்றி: இந்திரன் முகநூல் பதிவு