நட்புக்கு மதிப்பளிக்கும் நட்சத்திரங்கள்!

அருமை நிழல்:

டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் திரைத்துறைக்கு அறிமுகமானதிலிருந்தே நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் கௌரவ தோற்றத்தில் வந்துபோவது வழக்கமான ஒன்று.

அப்படி, சிரஞ்சீவி நடிப்பில் 1989 ல் வெளியான ‘ராஜா விக்ரமார்கா’ படத்துவக்கக் காட்சியில், ரஜினிகாந்த் கிளாப் அடித்துக் கொடுத்தார். அருகில் அப்போதைய முன்னணி நடிகைகளான அமலாவும் ராதிகாவும் உள்ளனர்.

மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘ராஜா விக்ரமார்கா’ படம் சிரஞ்சீவியின் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படங்களில் ஒன்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.  

 

You might also like