கவியருவில் பராமரிப்பு காரணமாக உயிர் சேதம் ஏற்படும் அபாயம்!

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த ஆழியார் கவியருவியில் பராமரிப்பு குறைபாடு காரணமாக உயிர்ச் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுற்றுலாப் பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு…

ஆனைமலைப் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆனைமலை அடுத்த ஆழியார் கவியருவி தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

தற்போது கவியருவிக்கு நீர்வரத்து சீரானதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் சுற்றுலா பயணிகள் ஆழியார் கவியருவியில் முகாமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது கவி அருவியின் நீர் பரப்பு பகுதியில் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் சேதமடைந்ததால் மர கட்டைகளை வைத்து தற்காலிக தடுப்புகளை வன துறையினர் அமைத்துள்ளனர். ஆனால் அதுவும் சிதலமடைந்து காணப்படுகிறது.

அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் கால் இடரும் போது உயிர் சேதத்தை ஏற்படுத்தும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பராமரிப்பின்றி இரும்பு தடுப்பு கம்பிகள் மற்றும் மரக்கட்டைகள் உள்ளது.

எனவே விரைவாக வனத்துறையினர் பாதுகாப்பு குறைபாடுகளை களைய வேண்டும் எனவும், உரிய பராமரிப்புடன் தடுப்பு கம்பிகளை மீண்டும் அமைக்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரும் முன் காப்போம் என்ற நியதிப்படி உயிர் சேதம் ஏற்படுவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

– தேஜேஷ்

You might also like