இக்காலக்கட்டத்தில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று இரவில் படுத்தால் தூக்கம் வரவில்லை என்பதே. பொதுவாக நல்ல தூக்கம் என்பது 8 மணி நேரம் கட்டாயம் அனைவரும் உறங்க வேண்டும்.
இது வயதிற்கு ஏற்ப மாறுபடும். பிறந்த குழந்தைகள் 15 மணி நேரம் வரை தூங்கும். தூக்கம் சரியாக இல்லையென்றால் அடுத்த நாளுக்கான வேலை சரியாக நடக்காது.
தூக்கம் வரவில்லை என இரவில் மொபைல் போன் பார்ப்பது, எதிர்காலம் பற்றி சிந்திப்பதுயென அனைத்து அலைகளும் நம் மனதில் அலை பாயும் அப்போது தூக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
இக்காலங்களில் பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களுக்கும் அதிகமாக இந்தப்பிரச்சனை உள்ளது.
நாம் ஏன் தூங்க வேண்டும் என்றால் மெலடோனின் இயற்கையாக நமது உடலில் சுரக்கும் சுரப்பி இது இருட்டாக இருக்கும் போதுதான் அதிகமாக சுரக்கும்.
இது உறக்கம் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு ‘உறக்கத்தைத் தூண்டும் சுரப்பி ஆகும். இரவில் எந்த மாதிரியான உணவை சாப்பிட்டால் தூக்கம் நன்றாக வரும் என்று பார்ப்போம்.
உணவுக் கட்டுப்பாடு :
இரவு உணவில் கட்டுப்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எளிதில் செரிக்கக்கூடிய உணவான இட்லி, இடியாப்பம், பொங்கல் என்று எண்ணெய் அதிகமாக சேராத எளிதில் செரிமானமாக கூடிய உணவை உண்ண வேண்டும்.
பால் அருந்தலாம் :
பொதுவாக இரவில் பால் அருந்தக்கூடாது. அது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இரவில் தூக்கம் வரவில்லை என்றால் சாப்பிட்டதற்கு பிறகு படுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மிதமான சூட்டில் காய்ச்சிய பாலை அருந்தலாம்.
உலர் பருப்பு வகைகள் :
பொதுவாக பிஸ்தா, பாதாம் பருப்பு இரவு உணவுக்கு பின் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பு சாப்பிடுவது உடலுக்கு ஊட்டச்சத்து தருவதுடன் தூக்கத்தை வரவழைக்கும்.
வாழைப்பழம் :
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மலச்சிக்கலுக்கு மட்டுமின்றி நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
செர்ரி பழம் :
இரவு தூங்குவதற்கு முன்பு இரண்டு செர்ரி பழத்தை சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை இருக்காது.
கீரை வகைகள் :
பசலக்கீரையை இரவு உணவில் எடுத்துக் கொண்டால் செரிமான பிரச்சனை, எந்த தொந்தரவும் இல்லாமல் தூங்க உதவி புரியும்.
– வைஷ்ணவி பாலு