ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பம்பரங்கள்!

குழந்தைகள் விளையாடுவதற்காக மனித இனம் கண்டுபிடித்த கருவிகளில் பழமையான ஒன்றாக பம்பரத்தைச் சொல்வார்கள்.

ஒவ்வொரு நாகரிகத்திலும் வெவ்வெறு பெயரோடு, சின்னச் சின்ன மாற்றங்களோடு இது பல்லாயிரம் ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது.

சீனாவில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பம்பரம் சுழற்றியிருக்கிறார்கள்.

இரண்டு கைகளால் சாட்டையைச் சுழற்றி, பம்பரத்தை லாவகமாக அந்தரத்தில் சுழலவிட்டு,

அதைத் தலையில் தாங்கிப் பிடிக்கும் முதியவர்களை சீன பூங்காக்களில் சாதாரணமாகப் பார்க்கலாம். டயபோலோ எனப்படுகிறது, தலையில் சுழலும் இந்த பம்பரம்.

You might also like