இறுதிகட்டத்தை எட்டிய அர்ஜூன்தாசின் ரசவாதி!

விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘மௌன குரு’ மற்றும் ‘மகாமுனி’ போன்ற தனது திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாந்தகுமார்.

தற்போது இயக்குநர் தனது புதிய கிரைம் ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ரசவாதி’ யை அறிவித்துள்ளார்.

அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

இயக்குநர் சாந்தகுமாரின் முந்தைய இரண்டு படங்களுமே தனித்துவமான திரைக்கதையைக் கொண்டிருந்தது.

அதுபோல, ‘ரசவாதி’ திரைப்படமும் நிச்சயம் ஒரு புதிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும். கொடைக்கானல், மதுரை, கடலூர் மற்றும் பழனி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

You might also like