பொதுவாகவே நம் அனைவருக்கும் ஒரு பழக்கம் உண்டு. என்னவென்றால் குழம்பிலோ அல்லது தாளிப்பிலோ கருவேப்பிலை இருந்தால் அவற்றை எடுத்து தூரம் வைத்து விட்டு தான் நாம் சாப்பிடுவோம்.
நாம் வேண்டாம் வாசனைக்காக சேர்க்கப்படும் இதில் என்ன சத்து இருக்க போகிறது என நினைக்கும் பொருள்களில் தான் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
கருவேப்பிலையை நம் உணவில் தினசரி குழம்பிலோ, சட்னியாகவோ அல்லது பொடியாகவோ கலந்து சாப்பிட்டால் அவ்வளவு நன்மையுண்டு.
கருவேப்பிலை முடி வளருவதற்கும், கருவேப்பிலை சாறு இதில் ஆல்கலாய்டுகள் உள்ளதால் உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.
அதுமட்டுமின்றி கருவேப்பிலை சர்க்கரை நோய்க்கும் அருமருந்தாகவும் உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் மருந்தான மூலிகைகளில் கருவேப்பிலையின் சாறு பயன்படுத்தப்படுகிறது.
கருவேப்பிலை சாறு குடிப்பதால் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவும் குறையும். கருவேப்பிலை கண் ஒளி தெளிவுபெற செய்யும்.
ஜீரணத்தை மேம்படுத்தும். உடல் சூட்டை குறைக்கும். முடி வளர்ச்சிக்கு உதவும் என கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் சாப்பிட மாட்டோம். கருவேப்பிலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன.
கருவேப்பிலை நன்மைகள் :
சரும கருவளையம் நீங்க கருவேப்பிலையை நன்கு காய வைத்து அதனுடன் கசகசா மற்றும் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்த பொடியை, தினமும் குளிப்பதற்கு முன்னதாக முகத்தில் தடவி, ஐந்து நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.
இந்தப் பொடியை குளியல் பவுடராகவும் உபயோகப்படுத்தலாம். தொடர்ச்சியாக இவ்வாறு செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள கருவளையம் நீங்குவதுடன், முகம் பளபளப்பாகவும், பட்டு போல மிருதுவாகவும் இருக்கும்.
கருவேப்பிலையை நன்கு வெயிலில் காய வைத்து பொடி செய்து அவற்றை மோரிலும் கலந்து குடிக்கலாம்.
தொப்பை கொழுப்பை குறைக்கும் :
தினமும் காலை வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் வெளியேறி, தொப்பையை குறைப்பதற்கு உதவுகிறது.
எதிர்பாராத தலைசுற்றல் / மயக்கம் :
சம அளவு கருவேப்பிலை, சம அளவு கொத்தமல்லி, வெள்ளை உளுந்து சேர்த்து துவையலாக காலை, இரவு சாப்பிட்டு வந்தால் எதிர்பாராத தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படாமல் இருக்கும்.
உமிழ்நீர் சுரக்க :
கருவேப்பிலை, சம அளவு மா இலையை நன்கு காய வைத்து பொடி செய்து காலை, இரவு சாப்பாடுக்கு பின் சாப்பிட்டு வந்தால் நாவின் வறட்சி, உமிழ்நீர் சுரக்கவும், நா வெடிப்புக்கு ஒரு சிறந்த சூரணமாக இருக்கும்.
இரைப்பை சூட்டை குறைக்கும் :
கருவேப்பிலை காய், துவரம் பருப்புடன் சேர்த்து சாம்பார் வைத்து சாப்பிட்டு வர இரைப்பை சூடு, மலச்சிக்கல் போன்றவற்றை குறைக்கும்.
காது இரைச்சல் :
5 கருவேப்பிலை காயை பசும் பாலுடன் அரைத்து காலை இரவு உட்கொண்டால் காது இரைச்சல், மூங்கில் நாசி துவாரத்தில் வலி, காது வீக்கம் இருப்பவர்களுக்கு பயனளிக்கும்.
நரம்பு தளர்ச்சி :
திரிகடுகம் என அழைக்கப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி எடுத்துக்கொண்டு அதற்கு சம அளவில் கருவேப்பிலை மர பட்டையை உலர்த்தி நான்கையும் அரைத்து வைத்துக்கொண்டு இரவு எடுப்பதற்கு முன் தேன் அல்லது பாலில் கலந்து உட்கொண்டால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு, தூக்கமின்மை உள்ளவர்களுக்கு, ஒரு அற்புதமான மருந்தாக செயல்படுகிறது.
– வைஷ்ணவி பாலு