*2015-ம் ஆண்டு ஐ.நா. மன்றம் அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதியை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ளது.
* அப்துல் கலாமின் சொத்துக் கணக்கை ஆராய்ந்ததில் அவர் விட்டுச் சென்றவை 2500 புத்தகங்கள், ஒரு கைக்கடிகாரம், ஆறு சட்டை, நான்கு பேண்ட், மூன்று கோட், ஒரு ஜோடி செருப்பு, ஷீ மட்டுமே இருந்தது.
*அப்துல் கலாம் திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
*அப்துல் கலாம் ஒரு முறை சுவிட்சர்லாந்து சென்றார். அன்றை நாள் மே 26, அவர் இறந்த பின்பு சுவிட்சர்லாந்து அரசு அவர் சுவிட்சர்லாந்து வந்த நாளை அந்நாட்டின் அறிவியல் தினமாக அறிவித்துள்ளது.
*1958-ம் ஆண்டு மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல் கலாம் வேலைக்கு நேர்ந்த போது அவரது மாத ஊதியம் 250 ரூபாய் தான்.
*இந்திய இராணுவத்தில் உள்ள அக்னி, திரிசூல், பிருத்வி, நாள், ஆகாஷ் உள்ளிட்ட ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குநராக பணியாற்றியபோது வடிவமைக்கப்பட்டவையாகும்.
*அப்துல் கலாம் மிகப்பெரிய அறிஞர் என நமக்கு தெரியும். ஆனால் அவருக்கு எத்தனை டாக்டர் பட்டம் இருக்கிறது தெரியுமா? அவரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு 40 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
*அப்துல் கலாம் வாங்கிய விருதுகள்
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ் – பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ்
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது.
*மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐஐஎம்-ல் பேசிக்கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே விழுந்த அப்துல் கலாம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
*அவர் மாணவர்களுக்கு சொல்லிகொடுப்பதையே அதிகம் விருப்பினார். அதை செய்து கொண்டிருக்கும் போதே இறந்துவிட்டார்.
– நன்றி: அறிவை வளர்ப்போம் இணையவழி பதிவு.