மீன் சாப்பிடுவது எந்த அளவுக்குச் சத்தானது?

உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்பவர்கள் மட்டும் தான் புரோட்டின் நிறைந்த பொருட்கள் உண்ண வேண்டுமென்று இல்லை. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புரோட்டின் முக்கியம்.

புரோட்டின் என்பது நம் உடலில் ஆரோக்கியமான தசை வளரவும், எலும்புகள் வலுப்பெறவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்தவும், தேவையில்லாத கொலஸ்ட்ரால் வெளியேற்றவும், தலை முடி வளரவும் போன்ற பல பிரச்சினைக்கு புரோட்டீன் உதவி புரிகிறது.

அதேபோல் கண் பார்வைக்கும், உடல் எடை குறைக்கவும் மீன் பெரிதும் உதவி புரிகிறது.

சிக்கன், மட்டனில் உள்ள கொழுப்பை விட மீனில் கொழுப்பு மற்றும் கலோரியின் அளவும் குறைவாக உள்ளதால் உடல் எடை குறைக்க உபயோகப்படுத்தலாம்.

மீனில் ஒமேகா 3 (omega 3 fatty acid) இருப்பதால் மெட்டபாலிக் அளவை அதிகப்படுத்தும்.

இன்றைய காலந் கட்டத்தில் சிலருக்கு வறுவல் மீன் மட்டுமே பிடிக்கும் ஆனால் அதிலுள்ள நலனை விட குழம்பு மீனில் தான் அதிக அளவு நன்மையுண்டு.

இப்போது புரோட்டின் நிறைந்த மீன் வகைகள் பற்றி பார்ப்போம்.

சூறை மீன் : ஒருவர் ஒருநாள் சராசரியாக இவ்வளவு புரோட்டின் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குறிக்கப்படுகிறது. 100 கிராம் சூறை மீனில் 10% புரோட்டின் நமக்கு கிடைக்கிறது.

நெத்திலி மீன் : 100 கிராம் நெத்திலி மீனில் 26 முதல் 28% வரை புரோட்டின் கிடைக்கும்.

வாளை மீன் : 100 கிராம் வாழை மீனில் 23% உடலுக்கு தேவையான புரோட்டின் கிடைக்கும்.

காலா மீன் : 100 கிராம் காலா மீனில் 20 கிராம் புரோட்டின் கிடைக்கும்.

தட்டை மீன் : 100 கிராம் தட்டை மீனில் 19 முதல் 20 கிராம் உடலுக்கு தேவையான புரோட்டின் கிடைக்கிறது.

கொடுவா மீன் : 17 கிராம் உடலுக்கு தேவையான புரோட்டின் கிடைக்கும்.

மத்தி : மத்தி மீனின் அளவுக்கு ஏற்ற மாதிரி 20 முதல் 24 கிராம் புரோட்டின் உள்ளது.

கானாங் கெளுத்தி : கானாங் கெளுத்தியில் 19 கிராம் புரோட்டின் கிடைக்கும்.

– வைஷ்ணவி பாலு

You might also like