கண்ணதாசன் அவர்கள் புத்தகங்கள் படிக்கும்போது, படிப்பதாகவே தெரியாது. புத்தகங்களின் பக்கத்தை திருப்புவார். ஆனால், சட்டென்று கிரகித்துக் கொள்ளும் கற்பூர புத்தியைக் கொண்டவர்.
அதுபோல, கண்ணதாசன் எழுதுவதற்கு ஆரம்பித்தால், கடைமடை திறந்த வெள்ளம் போல தங்குத்தடையின்றி எழுத்துக்கள் சரளமாக வரும்.
மேலும், ஒரு டியூனுக்கு அத்தனை பாடல்கள் எழுதுவாராம். எது வேண்டுமோ அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு திரைக்கு வராத அவருடைய கவிதை வரிகள் நிறைய.
இப்போது போல டிஜிட்டல் முறை, அப்போது இல்லை என்பதால், கையெழுத்து பிரதிகள் எல்லாம் அழிந்துவிட்டன. இல்லையென்றால், அவருடைய கவிதை வரிகளை இன்னும் அதிகமாக சுவைத்திருக்கலாம்.
ஆம், எத்தனை மனிதர்கள் இருந்தாலும், இறந்தாலும், கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு நிகர் அவரே. அவருக்கு ஈடு, இணையாக மனிதர்களுள் யாருமில்லை..
- நன்றி: முகநூல் பதிவு