நந்தனாரைக் கேலி செய்யலாமா?

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் கிந்தனார் வில்லுப்பாட்டு புகழ் பெறத் தொடங்கியதும் சிலர் இதைத் தடுக்கும் வகையில் “நந்தனார் எப்படிப்பட்ட மகான்? அவரைக் கேலி செய்வதுபோல் கிந்தனார் என்று கேலி செயலாமா? இது தகுமா?” என்று ஒரு பிரச்சனையைக் கிளப்பினார்கள்.

உடனே கலைவாணர் நந்தனாரைப் பற்றி எழுதியவர் கோபாலகிருஷ்ண பாரதியார் என்ற பெரியவர். ஒரு நாள் சாப்பிடாமல் அவர் நிண்ட நேரம் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்த அவருடைய மனைவி “எழுந்து வாங்க, சாப்பிடலாம். அப்படி என்னதான் எழுதிறீங்க” என்று கூப்பிட்டார்.

கோபாலகிருஷ்ண பாரதியார் கொஞ்சம் பொறு. “நந்தனார் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  முடித்து விட்டு வருகிறேன்”  என்று கூற  ’என்ன நந்தனாரோ கிந்தனாரோ எழுந்து வாங்க சாப்பிட’ என்று சலிப்புடன் கூறினார்.

அப்படிப்பட்ட  நந்தனாரை எழுதியவரின் துணைவியார் கூறிய வார்த்தைதான் “கிந்தனார்”. நான் ஒன்றும்  புதிதாகச் சொல்லவில்லை” என்று விளக்கம்  கூறியதும் புகார் கூறியவர்கள் வாயடைத்துப் போனார்கள்.

1944 ஆம் ஆண்டில் ஜகதலப்பிரதாபன், பர்த்ரு ஹரி, பூம்பாவை, ஹரிதாஸ், வால்மீகி, ராஜராஜேஸ்வரி ஆகிய கிருஷ்ணன் நடித்த படங்கள் வெளிவந்தன.

– அன்புக்கொடி நல்லதம்பி எழுதிய ‘சமூக விஞ்ஞானி கலைவாணர்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

You might also like