ப்ரைம் வீடியோவின் அசல் தமிழ் இணைய தொடரான ‘ஸ்வீட் காரம் காபி’ எனும் இணைய தொடரின் இசையை வெளியிடுகிறது. இந்த இணைய தொடரின் இசை ஆல்பத்தில் 11 பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது.
கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கிறார். இயக்குநர்கள் பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோரின் இயக்கத்தில் லட்சுமி, மது, சாந்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தியாவின் மிகவும் விரும்பி பார்க்கப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோவில் ஜூலை 6-ம் தேதி முதல் வெளியாகவிருக்கும் அசல் தமிழ் இணைய தொடரான ‘ஸ்வீட் காரம் காபி ‘ எனும் இணைய தொடரிலிருந்து மயக்கும் இசை ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறது.
‘ஸ்வீட் காரம் காபி’- ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பெண்மணிகள் மற்றும் வெவ்வேறு தலைமுறையினர் எப்படி மறக்க முடியாத பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்பதை மிக அழகாக படம்பிடித்து காட்டுகிறது.
அவர்களின் அன்றாட வாழ்விலிருந்தும்.. அவர்கள் மீது சுமத்தப்பட்ட பழமையான எதிர்பார்ப்புகளிலிருந்தும்… ஓய்வெடுப்பதற்காக ஒரு மனக்கிளர்ச்சியுடன் சாலை பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
அதன் வழியில் தங்களை மீண்டும் கண்டறிந்து, மீதமுள்ள வாழ்க்கையினை வாழ்வதற்கான ஆர்வத்தை மீண்டும் தூண்டுவதற்கான ஒரு பயணமாக மாற்றம் பெறுகிறது.
‘கார்காலமே..’ எனத் தொடங்கும் பாடலும், ‘உத்னா ஹை ஐஸ்..’ எனத் தொடங்கும் பாடலும்.. என ஒவ்வொரு பாடலும், கதையை நிறைவு செய்யும் விதத்தில் இடம் பிடித்திருக்கிறது. இந்த பாடல்கள் இந்திய பார்வையாளர்களின் மனதில் நிச்சயமாக நீங்கா இடம்பெறும்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, “ஒரு இணையத் தொடருக்கு இசையமைப்பது பற்றி ரேஷ்மா என்னிடம் சொன்ன போது, முதலில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் ‘ஸ்வீட் காரம் காபி’யின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நான் பார்த்தபோது… கதை, கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் பயணம் ஆகியவற்றால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்” என்றார்.
ரேஷ்மா கட்டாலா, ”பார்வையாளர்களை ஒரு கதையுடன் பிணைப்பதில் இசை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் அவர்கள் மிகவும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கும் மற்றும் பின்பற்றும் கதாபாத்திரங்கள்..
குறிப்பாக ‘ஸ்வீட் காரம் காபி’ போன்ற உணர்வு பூர்வமான நாடகத்தில் இந்திய இசைக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு ஆல்பத்தை உருவாக்க கோவிந்த் வசந்தா சிறந்த தேர்வாக இருக்கும் என்று நான் எப்போதும் நம்பினேன்” என்றார்.
திங்க் மியூசிக் மூலம் ‘ஸ்வீட் காரம் காபி’யின் இசை ஆல்பம் விநியோகிக்கப்படுகிறது.
உலகளவில் அனைத்து முக்கிய இசை தொடர்பான ஸ்ட்ரீமிங் தளத்திலும் இந்த ஆல்பத்தின் பாடல்களும், இசையும் கிடைக்கிறது.