இசையமைப்பாளர் டி.ஆர். பாப்பா
பேரறிஞர் அண்ணாவுடன் ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’, ‘ரங்கூன் ராதா’, ‘நல்லவன் வாழ்வான்’, ‘எதையும் தாங்கும் இதயம்’ ஆகிய படங்களிலும் மு.கருணாநிதியோடு ‘அம்மையப்பன்’, ‘குறவஞ்சி’, ‘ராஜா ராணி ஆகிய திரைப்படங்களிலும் எம்.ஜி.ஆருடன் ‘நல்லவன் வாழ்வான்’ திரைப்படத்திலும் இசையமைப்பாளராகப் பணியாற்றினார் டி.ஆர். பாப்பா.
‘வைரம்’ படத்தில் ஜெயலலிதாவைப் பின்னணிப் பாடகியாக்கி, நான்கு தமிழக முதல்வர்களோடு திரைத்துறையில் பணியாற்றியவர் என்கிற பெருமையைப் பெற்றார்.
சி.எஸ்.ஜெயராமன் குரலில் ‘யார் சொல்லுவார் நிலவே’, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி குரலில் ‘உள்ளம் தேடாதே என்று சொல்லுதே’, பி.பானுமதி குரலில் ‘தலைவாரிப் பூச்சூடி உன்னை’, எஸ்.சி.கிருஷ்ணன் குரலில் ‘பூனைக் கண்ணை மூடிக் கொண்டால்’,
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் குரலில் ‘சிரிப்பு… இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு..’,
டி.எம்.சௌந்தரராஜன் குரலில் ‘உள்ளத்தின் கதவுகள் கண்களடா’, ஜே.பி.சந்திரபாபு குரலில் ‘ஒண்ணுமே புரியல உலகத்திலே’ என,
இந்த அற்புதமான படைப்பு, இசையாளுமைகளுடன் இணைந்து பணிபுரிந்த டி.ஆர்.பாப்பாவின் புகழை இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
அன்று இளம் தலைமுறை பாடகர்களாக வளர்ந்துகொண்டிருந்த எஸ்.ஜானகி, ஏ.எல். ராகவன், எம்.ஆர்.விஜயா போன்ற பலருக்கும் வாய்ப்பு கொடுத்து அரவணைத்துக் கொண்டார்.
நூற்றாண்டு நினைவு மலரில் இருந்து…
-நன்றி: இந்து தமிழ் திசை