எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி மே 28-ஆம் தேதி திறந்துவைத்தார்.
இந்நிலையில், வருகின்ற ஜூலை 3-வது வாரம் தொடங்கவுள்ள மழைக்கால கூட்டத் தொடரை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இன்னும் ஓரிரு நாள்களில் மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதியை நாடாளுமன்ற விவகார அமைச்சகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு மழைக்கால கூட்டத்தொடரின் போது, மணிப்பூர் கலவரம், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அத்துடன் டெல்லி மாநில அரசு, ஆளுநர் அதிகாரம் தொடர்பான அவசர சட்ட மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதை மாநிலங்களவையில் முறியடிக்க அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார்.
எனவே இந்தக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.