இலக்கை நோக்கிப் பயணிப்போம்!

நம்பிக்கைத் தொடர்: 

உங்களை நீங்களே மதியுங்கள், மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள்.
ஒரு நேர்மையற்ற சமூகத்தில் செல்வந்தராகவும் மரியாதைக்கு உரியவமாகவும் இருப்பது ஒரு அவமானமாகும்.

தன் புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது நன்னடத்தையிலும் காட்டும் மனிதனைதான் உலகம் விரும்புகிறது.

மனத் திடம் இல்லாத மனிதனால், வறுமையையும் சரி, செல்வ நிலையையும் சரி வெகுநாள் நீட்டிக்க முடியாது.

இலக்குகளை அடைய முடியாது என்று தெரியும்போது, நமது செயல்பாட்டு முறையினை சரி செய்ய வேண்டுமே தவிர, இலக்குகளை சரி செய்யக்கூடாது.

அறிவால் உழைப்பவர் ஆள்கின்றனர்; உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர்.
உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது, ஆனால் நாம் வலியுறுத்தி அதனை சிக்கலானதாக மாற்றுகிறோம்.

சிந்திக்காமல் படிப்பது வீண், படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது.
எவ்வளவு மெதுவாக செல்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறீர்கள் என்பதே முக்கியம்.

துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறோமோ, அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தை கடந்துவிட்டோம் என்பது உறுதி
பயிற்சி இல்லாத அறிவு பயனற்றது. அறிவு இல்லாத பயிற்சி ஆபத்தானது.

மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாவிட்டால் கவலைப்படாதீர்கள். மாறாக உங்களால் மற்றவர்களைப் புரிந்துகொள்ள முடியாவிட்டால் கவலைப்படுங்கள்.

கேள்வி கேட்கும் மனிதன் ஒரு நிமிடம் முட்டாள், கேள்வி கேட்காத மனிதன் வாழ்க்கை முழுமைக்கும் முட்டாள்.

நோக்கம் இல்லாமல் தொடர்வதைவிட, தொடராமல் இருப்பதே நல்லது.
கருணையுடன் செயல்படுங்கள், ஆனால் நன்றியை எதிர்பார்க்காதீர்கள்.

மற்றவர்களை மன்னிக்க முடியாதவர்கள், தாங்கள் கடந்து செல்ல வேண்டிய பாலத்தை தாங்களே உடைக்கிறார்கள்.

உங்களிடமிருந்து அதிகம் எதிர்பாருங்கள், மற்றவர்களிடமிருந்து குறைவாக எதிர்பாருங்கள், நீங்கள் மனக்கசப்புகளைத் தவிர்ப்பீர்கள்.

பிரச்சினையை விவரிக்க முடியாதவர், ஒருபோதும் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மாட்டார்.

நீங்கள் இரண்டு முயல்களைத் துரத்தினால் எதையும் பிடிக்க மாட்டீர்கள்.
ஒரு புத்திசாலி இசையால் தன் ஆத்மாவை வலுப்படுத்த முயல்கிறான், சிந்தனையற்றவன் தன் அச்சத்தைத் தணிக்க அதைப் பயன்படுத்துகிறான்.

நீங்கள் விரும்பும் ஒரு வேலையைத் தேர்வுசெய்யுங்கள், பிறகு உங்கள் வாழ்வில் ஒருநாள் கூட நீங்கள் வேலை செய்ய வேண்டியதில்லை.

அனைத்திலும் அழகு உள்ளது, ஆனால் எல்லோரும் அதைப் பார்ப்பதில்லை.
வாய்ப்புகளைப் பயன்படுத்தாதவர்களுக்கு கடவுளால் உதவ முடியாது.
தனது வேலையைச் சிறப்பாகச் செய்ய விரும்பும் வேலைக்காரன், முதலில் அவனுடைய கருவிகளைத் தயார்செய்ய வேண்டும்.

தீயவற்றின் உற்பத்திச் சாலை இதயம், தீயனவற்றை விற்கும் இடமே நாக்கு.
நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. நீ துணிவு உள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.

பயத்தை மனதிற்குள்ளேயே பயிர் செய்பவன் பாம்பை மனதில் வளர்க்கிறான்.
ஒவ்வொன்றும் அழகுடையதே. ஆனால் எல்லோர் கண்களும் அதைக் காண்பதில்லை.

மனதைக் கடமையில் செலுத்துங்கள். ஒழுக்கத்தைக் கடைப்பிடியுங்கள். அன்புக்குக் கட்டுப்படுங்கள். மேலான கலைகளில் மனதை செலுத்தி அமைதி பெறுங்கள்.

புகழைப் பொருட்படுத்தாதீர்கள், ஆனால் புகழ்பெறுவதற்கு தகுதியுடையவராக உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

கோபம் தலை தூக்கும்போது, அதன் பின்விளைவுகளை சிந்தித்துப் பாருங்கள்.
உயர்ந்த குணமுள்ள மனிதன் தான் எதைப் பற்றி யாரிடம் பேசுகிறோம் என்பதைக் குறித்து மிகுந்த கவனம் செலுத்துவான்.

கன்பூசியஸ்

You might also like