இயற்கையைக் காக்க ஒரு நடைபயணம்!

கடந்த மாதம் மே 20 ம் தேதி திண்டுக்கல்லில் இரண்டாவது முறையாக ‘இயற்கை நடை’ சிறப்பாக நடைபெற்றது.

இரு மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக நடந்த இயற்கை நடையில் கலந்து கொண்ட நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஒரு இயற்கை நடை திட்டமிடப்பட்டது.

முதல் நிகழ்வு நடந்த YMR பட்டி குளத்திலேயே இந்த முறையும் இயற்கை நடையை முன்னெடுத்தோம்.

நிகழ்வின் தொடக்கத்தில் எதற்காக இயற்கை நடை முன்னெடுக்கப்படுகிறது.

காலநிலை மாற்றம் குறித்த சிறு அறிமுகம், அத்துடன் எவ்வாறு இந்த நிகழ்வு நிகழும் YMR பட்டிக்குளம் மிக மோசமாக மாசடைந்த நிலையில் இருந்து நல்ல நிலைக்கு மக்களின் பங்களிப்புடன் சில ஆண்டுகளுக்கு முன்பு மீட்டெடுக்கப்பட்டு தற்போது பல்லுயிர்கள் வாழும் நீர்பிடிப்பு பகுதியாக விளங்குகிறது என்பதை எழுத்தாளர் நக்கீரன் எழுதிய நீர் எழுத்து நூலின் ஒரு கட்டுரை வாயிலாக விவரித்து நடையை தொடங்கினோம்.

அருகில் இருந்த வெப்பாலை, அத்தி, நீர்மருது ஆகிய மரங்களை அறிமுகம் செய்தவாறு அதில் இருக்கும் பறவைகளையும் பூச்சிகளையும் கண்டு நகர்ந்தோம்.
சிறிது தொலைவு நடந்ததும் எங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

அங்கு ஒரு நாவல் மரம் இருந்தது. அந்த நாவல் மரத்தின் அருகில் நான்கு ஐந்து இராகொக்குகள்(Night heron) அமர்ந்திருந்தன. பொதுவாக இரவாடிகளான (Nocturnal) இவைகளை பகலில் காண முடியாது.

பிறகு சற்று உற்று கவனித்த போது அங்கிருந்த நாவல் மரத்தில் பத்திற்கும் மேற்பட்ட கூடுகள் அமைத்து இராக்கொக்கு (Night heron) சிறிய நீர்காகமும் (Little Cormorant) சிறிய கொக்கும் (Little Egret) ஆகிய பறவைகள் இனப்பெருக்கம் செய்து வருவதை கண்டோம்.

இதுபோக அருகில் இருந்த வாகை மரத்தில் மூன்று கூடு‌களும், நீர் மருது மற்றும் ஓர் நாவல் மரத்தில் ஒரு கூடும், அயல் மரம் ஒன்றிலும் இராக்கொக்கு கூடுகள் அமைத்து வருகிறது.

இது போன்ற நகரத்தின் நடுவில் இருக்கும் ஓர் குளம் மீட்டெடுக்கும் போது எவ்வாறு பல்லுயிர்கள் அதை தங்களது இருப்பிடமாக தகவமைத்துக் கொள்கிறது என்பதற்கு மிகச்சிறந்த ஓர் எடுத்துக்காட்டு இந்த ஒய்எம்ஆர் பட்டிக்குளம்.

கலந்து கொண்ட அனைவரும் மிகுந்த ஆச்சரியத்துடன் அங்கு வேக வேகமாக குட்சிகளை சேகரித்து கூடுகள் கட்டிக் கொண்டும் இணையாக அமர்ந்து முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருக்கும் இராக்கொக்கு சிறிய கொக்கு சிறிய நீர்க்காகம் ஆகிய பறவைகளை கண்டு ரசித்தோம்

அதன் பிறகு அருகாமையில் இருந்த எருக்கஞ்செடியில் வெந்தய வரியின் (Plain tiger) பட்டாம்பூச்சி முட்டையிட்டு சிறு புழு மற்றும் கூட்டுப்புழு ஆகியவைகளை கண்டோம்.

நிகழ்வில் ஆமணக்கு தாவரத்தில் முட்டையடும் பட்டாம்பூச்சியும் (Castor butterfly ) கோண புளியங்காய் தாவரத்தில் மஞ்சள் புல்வெளியான் (Grass yellow) பட்டாம்பூச்சியும் முட்டை இடுவதை கண்டோம்.

பிறகு அயல் தாவரமான சீமை சக்கரப்பழம் மரத்தில் அருகே வவ்வால்கள் சாப்பிட்டு போட்ட எச்சத்தில் இருந்த அதன் விதைகளை குழந்தைகளுக்கு காண்பித்தோம்.

நிகழ்வின் இறுதியில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நம்மால் என்னென்ன செயல்களை செய்யலாம் அரசு என்ன செய்ய வேண்டும் குப்பை மேலாண்மை குறித்தும் தகவல்கள் பகிர்ந்து கொண்டோம்.

இந்த நடையில் சில இடங்களில் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதையும் சில மீன்கள் கரைகளில் வந்து மூச்சு வாங்குவதையும் கண்டோம்.

அப்போதுதான் புரிந்தது அந்த வாரம் ஏற்பட்ட வெப்ப அலையானது குளத்தில் நீரின் வெப்பத்தை அதிகரித்து உயிர்வளியின் இருப்பை குறைத்து மீன்கள் இறக்க காரணமாக இருக்கும் என்பதை மக்களுடனும் பகிர்ந்து கொண்டோம்.

இதற்கு முந்திய வாரம் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திலும் இது போன்ற நிகழ்வு நிகழ்ந்ததை சுட்டி காண்பித்தோம்.

நிகழ்வின் இறுதியில் கேள்வி பதில் அமர்வுடன் நண்பர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பலரும் ஆர்வத்துடன் அடுத்த இயற்கை நடை எப்போது திட்டமிடலாம் என கேட்டு அடுத்த நிகழ்வில் இன்னும் பலரை தாங்கள் அழைத்து வருவதாகவும் கூறினர்.

இந்த குளத்தில் பலரும் பல நாட்கள் நாம் நடந்த நடைப்பாதையில் நடை பயணம் செய்துள்ளனர்.

ஆனால் இந்த நிகழ்வில் கண்டது போன்ற பல்லுயிர்களை தாங்கள் அவதானித்ததில்லை, இன்று தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

அது மட்டுமின்றி தாங்களும் தங்கள் நண்பர்களுக்கு இந்த பல்லுயிர்கள் குறித்து எடுத்துக் கூறி காண்பிப்பதாகவும் இயன்ற வகையில் சற்று மீண்டும் மாசடைந்து வரும் இக்குளத்தை பாதுகாப்பதாகவும் உறுதியளித்தனர்.

நமது சூழல் குறித்து அறிந்து கொள்வோம் இயன்ற வகையில் பாதுகாப்போம்.

இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவிய காதர்மீரான் சகோதரர் மற்றும் குழு நண்பர்கள், உமாமகேஸ்வரன் சகோதரர் ஆகியோருக்கு நன்றிகள் பல. படங்கள் எடுத்து உதவிய‌ நண்பரகளுக்கும் நன்றிகள்.

குறிப்பு:- பறவையின் கூட்டின் படங்கள் தொலைவிலிருந்து டெலஸ்கோபிக் லென்ஸ் மூலம் எடுக்கப்பட்டது. எந்த விதத்திலும் பறவைகளை தொந்தரவு செய்யவில்லை.

அது போக இந்த மரங்களில் கூடுகள் இருப்பதை அருகில் இருக்கும் பூங்கா நிர்வாகிகளுக்கும் அரசுக்கும் தெரிவித்து இதை பாதுகாக்கும் நோக்கத்திற்காக எடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அவதானித்த பல்லுயிர்கள் கீழே:

Native Trees – மண்ணின் மரங்கள்:
குளத்தின் ஒருபுறம் மட்டுமே பார்த்தவையின் பட்டியல். நேர்மின்மை காரணமாக இந்த முறையும் முழு குளத்தையும் காண இயலவில்லை.

1. Arjuna tree (Terminalia arjuna) – நீர் மருது
2. The cluster fig (Ficus racemosa) – அத்தி
3. Indian beech (Millettia pinnata) – புங்க மரம்
4. Peepal Tree (Ficus religiosa) – அரசமரம்
5. Neem tree (Azadirachta indica) – வேப்பமரம்
6. Gum Arabic tree (Vachellia nilotica) – நாட்டுக்கருவேலம்
7. Manila tamarind (Pithecellobium dulce) – கொடுக்காய்ப்புளி
8. Indian mulberry (Morinda tinctoria) – மஞ்சணத்தி/நுணா
9. Chaste tree (Vitex sp) – நொச்சி
10. Drumstick (Moringa sp) – முருங்கை
11. Banyan Tree (Ficus benghalensis) – ஆலமரம்
12. Indian blackberry / Jamun (Syzygium cumini) – நாவல்
13. Indian tulip tree / Portia Tree (Thespesia populnea) – பூவரசு
14. Pala Indigo Plant, Dyer’s Oleander (Wrightia tinctoria) – வெப்பாலை
15. vegetable hummingbird / Agati (Sesbania grandiflora) – அகத்தி
16. Siamese cassia / cassia tree (Senna siamea) – மஞ்சள் கொன்றை

Native Plants – மண்ணின் தாவரங்கள்:
17. Thorn Apple (Datura.sp) – ஊமத்தை
18. Milkweed (Calotropis sp.) – எருக்கு
19. Purple heart glory (Ipomoea sagittifolia) – நறுந்தாளி
20. Castor bean (Ricinus communis) – ஆமணக்கு
21. Passion flower (Passiflora foetida) – சிறுபூணைக்காளி
22. Spong Gourd (Luffa aegyptiaca) – நுரை பீர்க்கங்காய்
23. Prickly Chaff Flower (Achyranthes aspera) – நாயுருவி
24. Red spiderling (Boerhavia diffusa) – மூக்கிரட்டை
25. Baconweed / Pigweed (chenopodium album) – பருப்பு கீரை
26. Madagascar Periwinkle (Catharanthus roseus) – நித்திய கல்யாணி
27. Ixora – வெட்சி / இட்டிலிப் பூ
28. Euphorbia hirta – அம்மான் பச்சரிசி
29. Desert horsepurslane (Trianthema portulacastrum) – சாரணை
30. Grass sp.

Exotic Trees & Plants – அயல் மரம் & தாவரங்கள்:
31. Singapore cherry (Muntingia calabura) – சீமை சர்க்கரைப்பழ மரம்
32. (Prosopis juliflora) – சீமை கருவேலம்
33. Lakshmi taru / Paradise tree (Simarouba glauca) – சொர்க்கம்
34. Rain tree (Samanea saman) – அயல் தூங்குமூஞ்சி மரம்
35. Rose Trumpet tree (Tabubea rosea) – தபுபியா
36. False ashoka (Polyalthia longifolia) – நெத்திலிங்கம்
37. Water hyacinth (Eichhornia crassipes) – வெங்காயத்தாமரை
38. (Achyranthes ficoidea) – சீமை பொன்னாங்கண்ணி
39. (Eclipta prostrate) – சீமை வெள்ளை கரிசலாங்கண்ணி
40. (Bougainvillea glabra) – சீமை காகிதப் பூ
41. American Mint (Mesosphaerum suaveolens) – கங்கா துளசி
42. Nachu kottai Keerai / latcha kottai keerai (Pisonia Alba) – இலட்சகெட்ட கீரை மரம்
43. Triffid weed (Chromolaena odorata)
44. Parthenium – பார்த்தீனியம்
45. Exotic Grass sp.

Naturalized species:
46. Cattail (Typha angustifolia) – சம்பை /எருவை (நீர்வழிப்பாதையில்)

Birds – பறவைகள்:
1. Little egret (Egretta garzetta) – சிறிய கொக்கு
(Nesting observed)
2. Little cormorant (Microcarbo niger) – சிறிய நீர்க்காகம்
(Nesting observed)
3. Little grebe (Tachybaptus ruficollis) – முக்குளிப்பான்
(Sub adult observed)
4. Little green heron (straighted heron) – தோசி கொக்கு
5. Indian Pond Heron (Ardeola grayii) – மடையான்
(Breeding plumage observed)
6. Black-crowned night-heron (Nycticorax nycticorax) – இராக்கொக்கு
(Nesting observed)
7. White-breasted waterhen (Amaurornis phoenicurus) – வெண்மார்புக் கானாங்கோழி
8. Glossy ibis (Plegadis falcinellus) – ஒளிரும் அன்றில்
9. Spot billed duck (Anas poecilorhyncha) – புள்ளி மூக்கு வாத்து
10. White throated kingfisher (Halcyon smyrnensis) – வெண்மார்பு மீன்கொத்தி
11. Common myna (Acridotheres tristis) – நாகணவாய்
12. Black drongo (Dicrurus macrocercus) – கரிச்சான்
13. Common Tailor Bird (Orthotomus sutorius) – தையல் சிட்டு
14. Yellow-billed Babbler (Turdoides affinis) – வெண்தலைச்சிலம்பன் / தவிட்டுக் குருவி
15. Purple sunbird (Cinnyris asiaticus) – ஊதாத் தேன்சிட்டு
16. Asian koel (Eudynamys scolopaceus) – குயில்
17. Rose-ringed parakeet (Psittacula krameri) – கிளி
18. Coppersmith barbet (Megalaima haemacephala) – செம்மார்புக் குக்குறுவான்
19. White browed Wagtail (Motacilla maderaspatensis) – வெண்புருவ வாலாட்டி
20. House crow (Corvus splendens) – காகம்
21. Feral rock pigeon (Columba livia) – மாடப்புறா
22. Spotted dove (Spilopelia chinensis) – மணிப்புறா
23. Shikra birds (Accipiter badius) – வல்லூறு
24. Common Hawk Cuckoo – அக்காகுயில்

Insects – பூச்சிகள்:-

Bees – தேனீக்கள்:
1. Indian Honey bee (Apis cerana indica) – தேனீ
2. Carpenter bee (Xylocopa) – தச்சன் தேனீ/ கோதும்பி
3. Blue Banded Bee (Amegilla)

Wasps – குளவிகள்:
4. Red paper wasp (Polistes carolina) – செங்குளவி
5. Black and yellow mud dauber (Sceliphron caementarium)
6. Banded hornet sp.

Ants – எறும்புகள்:
7. Carpenter ant (Camponotus) – கட்டெறும்பு
8. Black crazy ant or long-horned crazy ant (Paratrechina longicornis)
9. Fire ant (Solenopsis) – செவ்வெறும்பு
10. Pharoh ant (Monomorium pharaonis)

Butterflies – பட்டாம்பூச்சிகள்:
11. Plain tiger (Danaus chrysippus) – வெந்தய வரியன்
12. Common grass yellow (Eurema hecabe) – மஞ்சள் புல்வெளியாள்
13. Common crow (Euploea core) வெண்புள்ளி கருப்பன்
14. Common emigrant (Catopsilia pomona) – கொன்னை வெள்ளையன்
15. Common castor (Ariadne merione) – ஆமணக்கு சிறகன்
16. Common rose (Pachliopta aristolochiae) – ரோசா அழகி
17. Blue Mormon (Papilio polymnestor) – நீல அழகி
18. Zebra Blue (Tarucus plinius)
Moth – அந்துப்பூச்சிகள்:
19. Sandalwood defoliator (Amata passalis)

Dragonfly & Damselfly – (தட்டான் & ஊசித்தட்டான்):
20. Ditch jewel (Brachythemis contaminata) – தேன் தட்டான்
21. Ground skimmer (Diplacodes trivialis) – தரைத்தட்டான்
22. Senegal golden dartlet (Ischnura senegalensis) – தாமரை ஊசித்தட்டான்
23. Coromandel marsh dart (Ceriagrion coromandelianum) – மஞ்சள் ஊசித்தட்டான்

Flies – ஈக்கள்:
24. Non-biting midge fly (Chironomidae)
25. Crane fly (Tipulidae)
26. Mosquitoes (Culicidae) – கொசு

Other Insects – பிற பூச்சிகள்:
27. White fly (Aleyrodidae)
28. Water strider (Gerridae)

Arachnids (எட்டுக்காலிகள்):-
Spiders (சிலந்திகள்):
1. Green lynx spider (Peucetia viridans) – பச்சை ரோம சிலந்தி
2. Two lined jumping spiders (Telamonia dimidiate) – இருவரி தாவும் சிலந்தி
3. Jumping spider – தாவும் சிலந்தி

Fishes – மீன்கள்:
1. Carp – கெண்டை மீன்
2. Snake head – கொரவை

Exotic Ornamental Fishes – மீன்கள்:
3. Tilapia sp. – சிலேபி மீன்
4. Wild guppy
5. Koi

Reptiles – ஊர்வனங்கள்:
1. Oriental Garden lizard (Calotes versicolor) – ஓணான்
2. Common many-keeled grass skink (Eutropis carinata) – அரணை
3. Fan throated lizard (Sitana ponticeriana)
4. Snake sp (நீரினுள் பாம்பு)

Mammals – பாலூட்டிகள்:
1. Three-striped palm squirrel (Funambulus palmarum) – அணில்

இந்த நடையின் போது குளத்தில் கண்ட பல்லுயிர்கள் எண்ணிக்கை: 110

நன்றி: சூழல்அறிவோம் முகநூல் பதிவு

You might also like